»   »  இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக...: புதிய சாதனை படைத்த 'டோணி' படம்

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக...: புதிய சாதனை படைத்த 'டோணி' படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய சினிமா வரலாற்றில் எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி தான் அதிக வசூல் செய்துள்ள வாழ்க்கை வரலாற்று படம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம் கடந்த மாதம் 30ம் தேதி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியானது.

'MS Dhoni - The Untold Story' biggest earning biopic in Indian cinema, claim makers

டோணி படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டோணி படம் இதுவரை ரூ. 112.70 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த வாழ்க்கை வரலாற்று படம் இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டோணி மீது மக்கள் வைத்துள்ள அதிக அன்பை இந்த வசூல் சாதனை நிரூபித்துள்ளது என்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.

இந்தியில் மிர்சியா, டுடக் டுடக் டூட்டியா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளபோதிலும் டோணி படத்திற்கு மவுசு குறையவில்லையாம்.

English summary
'MS Dhoni - The Untold Story', a film on the life of cricket star Mahendra Singh Dhoni, has minted over Rs 112 crore since its release on September 30, becoming the biggest earning biopic in Indian cinema, claim its makers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil