»   »  கிரவுண்டில் மட்டும் அல்ல பாக்ஸ் ஆபீஸிலும் டோணி 'சென்ச்சுரி': காரணம் தல ரசிகர்கள்

கிரவுண்டில் மட்டும் அல்ல பாக்ஸ் ஆபீஸிலும் டோணி 'சென்ச்சுரி': காரணம் தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமாக்கப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.

MS Dhoni: The Untold Story’ crosses Rs. 100 cr at box office

60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியோட்டர்களில் வெளியான டோணி இந்தியாவில் மட்டும் ரூ.103.4 கோடி வசூல் செய்துள்ளது.

இது குறித்து டோணி படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில்,

டோணி படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. டோணி மீது இந்திய ரசிகர்கள் வைத்துள்ள அளவு கடந்த அன்பால் இது சாத்தியமானது. இது எங்களுக்கு ஸ்பெஷலான படம். டோணி படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.

டோணி படம் கடந்த மாதம் 30ம் தேதி ரிலீஸானது. டோணி பட வெற்றி மூலம் சுஷாந்த் சிங்கின் மார்க்கெட் கூடியுள்ளது. தமிழக ரசிகர்கள் எங்க தல டோணி டா என்று கூறி தியேட்டர்களுக்கு படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
“MS Dhoni: The Untold Story”, the biopic on Indian skipper Mahendra Singh Dhoni, has crossed the Rs. 100 crore-mark at the box office, the makers have said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil