»   »  சிக்கனை இலவசமாக வழங்கி, சஞ்சய் தத் விடுதலையைக் கொண்டாடும் உணவகம்.. இங்கல்ல மும்பையில்!

சிக்கனை இலவசமாக வழங்கி, சஞ்சய் தத் விடுதலையைக் கொண்டாடும் உணவகம்.. இங்கல்ல மும்பையில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சஞ்சய் தத் விடுதலையை முன்னிட்டு சிக்கன் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று மும்பை உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதாகி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் பிப்ரவரி 25ம் தேதி விடுதலையாக உள்ளார்.

Mumbai Restaurant To Serve Free Dish Sanjay Dutt's Release

தண்டனைக் காலம் முழுவதையும் ஏராளமான பரோல்களில் கழித்த சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடிவடையும் முன்பே, விடுதலையாவது மிகப்பெரிய சர்ச்சையை எற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சஞ்சய் தத் மீதான பாசத்தில் அவரது குடும்பத்தினரை மிஞ்சியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர்.

நூர் முஹமதி என்ற அந்த உணவகத்தின் உரிமையாளர் பிப் 25 ம் தேதி சஞ்சய் தத் விடுதலையாவதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிக்கன் உணவு ஒன்றை வழங்கவிருக்கிறார்.

அந்த சிறப்பு உணவிற்கு 'சிக்கன் சஞ்சு பாபா' என்று பெயர் வைத்திருக்கும் அவர், தனது கையால் அந்த சிறப்பான சிக்கன் உணவை சஞ்சய் தத்திற்கு வழங்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

English summary
A restaurant owner in Mumbai will celebrate actor Sanjay Dutt's release from Yerwada central prison on February 25 by serving a special dish called 'Chicken Sanju Baba' for free at his restaurant Noor Mohammadi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil