»   »  உலகப் புகழ் பாடகர் பாப் மார்லி மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய பாடல்!

உலகப் புகழ் பாடகர் பாப் மார்லி மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
உலக புகழ் பாப் மார்லி மகன் முன்னிலையில் அரங்கேற்றிய முருகன் மந்திரம் பாடல்..!!

உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி (Ky Mani Marley) முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடல் அரங்கேற்றப்பட்டது!

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற 'மோஜோ ரைஸிங்' (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

Murugan Manthiram's Song in front of The Legend Bob Marley's Son Ky Mani Marley!

16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்... என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக 'தீரா தீராளே' பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி.

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் 'இன்விக்டஸ்'(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்திரம். 'இன்விக்டஸ்' ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று 'தீரா தீராளே'.

Murugan Manthiram's Song in front of The Legend Bob Marley's Son Ky Mani Marley!

இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், "இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும் கூட. 'தீரா தீராளே' பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி," என்றார்.

English summary
Murugan Manthiram is happy for presenting his lyrical "Theeraa Theeraaly" in front of The Legend Singer & Composer Bob Marley's son "Ky-Mani Marley"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil