twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையில்லாமல் சினிமா இல்லை - இளையராஜா

    By Shankar
    |

    Ilayaraaja
    சென்னை: இசையில்லாமல் சினிமா இல்லை... இரண்டும் பிரிக்க முடியாதவை என்றார் இசைஞானி இளையராஜா.

    சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, "என்னை இங்கே எல்லோரும் பாராட்டி பேசினார்கள். பாட்டு நன்றாக போட்டு இருக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டுவது, 'நீங்க நல்லா மூச்சு விடறீங்க' என்று சொல்வது போல் இருக்கிறது.

    சினிமா என் மீது வந்து போகிறது. நான், 'ஸ்கிரீன்.' ஸ்கிரீன் இல்லாமல், சினிமா ஓட்ட முடியாது. இசை இல்லாமல், சினிமா இல்லை.

    ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் நானும், ரஜினியும், மோகன்பாபுவும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

    எனக்கு ஞாபகம் இல்லாத விஷயங்களை எல்லாம் ரஜினி ஞாபகப்படுத்தினார். அந்தக் காலத்தில் ஒரு முறை ரஜினிகாந்துக்கு ஒரு குறிப்பிட்ட படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அந்த படத்தில் அவரை நடிக்கும்படி, நான் சொல்லி அனுப்பினேன். அதன்பிறகு அவர் அந்த படத்தில் நடித்தார்.

    "சாமி (இளையராஜா) சொன்னதால்தான் அந்த படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றது'' என்று பழைய சம்பவங்களை எல்லாம் ரஜினி எனக்கு ஞாபகப்படுத்தினார்.

    இப்படிச் சொல்வதால், நான் அவரை விட பெரிய ஆள் என்று அர்த்தம் அல்ல. ரஜினி பெருந்தன்மையானவர் என்பதுதான் உண்மை!'' என்றார்.

    English summary
    Maestro Ilayaraaja says that cinema and music inseperable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X