25 ஆண்டுகளை நிறைவு செய்த பிஜிஎம் கிங்...அடுத்த அவதாரத்திற்கு ரெடியாகும் யுவன்
சென்னை : இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதுவரை இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளராக இருந்த யுவன் விரைவில் அடுத்த அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் மிக முக்கியமான டாப் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். 1996 ம் ஆண்டு தனது 16வது வயதில் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைக்க துவங்கிய யுவன், இன்று இசை காதலர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். மனதை மயக்கும் இசையை வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவர் மட்டும் தான்.

பிஜிஎம் கிங் யுவன்
இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ள யுவன்சங்கர் ராஜா, கோலிவுட்டின் டாப் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் பணியாற்றி விட்டார். பிஜிஎம் என்றாலே யுவன் தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள், டைரக்டர்கள், பிரபலங்களின் மனங்களை கவர்ந்த யுவன், பிஜிஎம் கிங் என அனைவராலும் புகழ்ப்படுகிறார்.

யுவனின் 25 ஆண்டுகள்
விஜய், அஜித் படங்கள் என்றால் ஸ்பெஷல் தீம் மியூசிக்கை உருவாக்கி, அதிலேயே படத்தின் ஹிட்டை உறுதி செய்யக் கூடிய மேஜிக் தெரிந்தவர் யுவன். தற்போது திரையுலகில் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு நேற்று மீடியாக்களை சந்தித்து, இதுவரை தனக்கு அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்தார் யுவன். அதோடு தனது வருங்கால பிளான் பற்றியும் யுவன் ஓப்பனாக பேசி உள்ளார்.

புதிய அவதாரம் எடுக்கும் யுவன்
அதில், இதுவரை இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளராக மட்டுமே இருந்த தான் விரைவில் டைரக்டராக அவதாரம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 2017 ல் தயாரிப்பாளரான யுவன், தான் இயக்க போகும் படத்திற்கு அவரே கதையும் எழுத போகிறாராம். நாயகியை மையமாக கொண்ட படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2022 ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2023 ம் ஆண்டின் துவக்கத்தில் டைரக்டராக தனது பணியை துவக்க போகிறாராம்.
Recommended Video

நான்கு படங்களில் பிஸி
அதோடு சோஷியல் மீடியாவில் தனது ரசிகர்கள், நண்பபர்கள், குடும்ப உறுப்பினர்கள், தனக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து எமோஷனலான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் யுவன். தற்போது யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதியின் மாமனிதன், சந்தானத்தின் ஏஜன்ட் கண்ணாயிரம், அமீரின் இறைவன் மிக பெரியவன், ராமின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிற்கு இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











