Don't Miss!
- News
வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்..ஓபிஎஸ் சொன்ன குடியரசு தின மெசேஜ்
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நிர்வாண படம் அனுப்பி படுக்கைக்கு அழைத்த டுபாக்கூர் இசையமைப்பாளர் கைது
பெங்களூரு: ஃபேஸ்புக்கில் நட்பாக இருந்த இளம்பெண் ஒருவருக்கு தனது நிர்வாணப் படங்களைத் தொடர்ந்து அனுப்பி படுக்கைக்கும் அழைத்த டுபாக்கூர் இசையமைப்பாளர் ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.
இன்றைய சூழ்நிலையில் பெண்கள் வெளியே செல்ல தேவையில்லை. வீட்டுக்குள் இருக்கும் இன்டர்நெட் கதவை திறந்தாலே ஆபத்து வீடு தேடி வரும். அப்படி ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பெங்களூருவில் உள்ள கே.எஸ்.லே அவுட்டில் வசிப்பவர் முரளிதர் ராவ். தனது முகநூல் பக்கத்தில் கன்னட திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக்கொண்ட படத்தைத் தொடர்ந்து பகிர்ந்து வந்திருக்கிறார். தனக்கு கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள், இயக்குநர்கள் மிகவும் நெருக்கம் இருப்பதாகவும் தன்னால் பட வாய்ப்புகள் வாங்கித் தரமுடியும் என்றும் முகநூல் மூலமாக தொடர்ந்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்.
இதை பார்த்து இவர் மீது நம்பிக்கை கொண்டு பல பெண்கள் இவரை அணுகி உள்ளனர். அவரது பதிவுகளை நம்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நடிப்பு ஆசையிருக்கிறது. படங்களில் வாய்ப்பு வாங்கித் தரமுடியுமா எனக் கேட்கவுமே முரளியின் சுயரூபம் மெல்ல வெளிப்படத்துவங்கியது.
இது தான் சரியான சமயம் என்று, கன்னடத் திரையுலகில் தான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்று அந்தப் பெண்ணிடம் காட்டிக்கொள்ள ஆரம்பித்த அவர் அப்பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்களையும் செக்ஸ் துணுக்குகளையும் ஃபார்வேர்ட் செய்யத் தொடங்கினார்.
சுடச்சுட... தண்ணீருக்குள் செம ஹாட்டா.. பிகினி போட்டோ ஷூட் நடத்திய 'புலி' ஹீரோயின்..!
இதை கண்டு மன ரீதியாக பாதிக்கப்பட்டாள் அந்த பெண். அத்துடன் நில்லாமல் தனது இல்லத்துக்கு ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக வரவேண்டியிருக்கும் என்றும் அது மட்டுமின்றி தன்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பெரிய வாய்ப்புகள் வாங்கித்தர முடியும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார்.
அதற்கு அப்பெண் மவுனம் சாதிக்கவே தொடர்ந்து தனது முழு நிர்வாணப் படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு தரத் துவங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது இம்சைகள் அதிகமாகவே அந்த இளம்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அத்தனை ஆதாரங்களையும் ஒப்படைத்து புகார் செய்தார்.
உடனே அந்த காமுக இசையமைப்பாளரை கைது செய்த போலீஸார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரால் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. விசாரணை ஒரு பக்கம் இருக்க கன்னட சினிமா உலகத்தினர் இவருடைய செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.