இயக்குனர் ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் … 8 ஆண்டுக்கு பிறகு நடிக்கிறார் !

சென்னை : அருண் விஜய், ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தில் கங்கை அமரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Av33 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள, இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள்.

கங்கை அமரன்

கங்கை அமரன்

தமிழ் சினிமாவில் 1970 களில் தொடங்கி, கடந்த 41 ஆண்டுகளாக பயணித்து வருபவர் கங்கை அமரன். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுவரில்லாத சித்திரங்கள், வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

படங்களிலும் நடித்துள்ளார்

படங்களிலும் நடித்துள்ளார்

கங்கை அமரன் தற்போது தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பாஜக கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவரின் மகன் வெங்கட் பிரபு நடிகரும், இயக்குநரும் ஆவார். கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜி அமரனும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கங்கை அமரன் முக்கிய வேடத்தில்

கங்கை அமரன் முக்கிய வேடத்தில்

கங்கை அமரன் கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 போன்ற படங்களில் நடித்திருப்பவர். அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த கங்கை அமரன், தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெளரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை காட்சியில், கங்கை அமரன் ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த காட்சி காரைக்குடியில் உள்ள கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதில், மீசையை முறுக்கிவிட்டு மாஸாக இருந்தார்.

பிரியா பவானி சங்கர் ஜோடி

பிரியா பவானி சங்கர் ஜோடி

அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அருண்விஜய் காயம்

அருண்விஜய் காயம்

சமீபத்தில் அருண் விஜய்க்கு மிகப்பெரிய சண்டை காட்சி எடுக்கும் போது வலதுப்புற கையில் காயம் ஏற்பட்டு விட்டது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண்விஜய் பதிவிட்டு இருந்தார். மேலும் 5 நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X