For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராகதேவனுக்கு இன்று பிறந்த நாள்..பார்த்திபனின் வாழ்த்து மழையில் நனைந்த இசைஞானி!

  |

  சென்னை : மயக்கும் இசையால் நம்மை கட்டி போட்ட இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு. இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார்.

  தமிழ் சினிமாவில் உதயமான இசைஞானி இந்திய சினிமாவை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தார் என்பது தான் நிதர்சனமான உண்மை. பல விதமான மெட்டுக்கள் மூலம் மெல்லிய ராகங்கள் அவரது ரசிகர்களை அதிகரித்தது. நிறைய தேடல் , மிகுந்த அனுபவம் , மற்றவர்களை வசியம் செய்யும் வசந்த கால ராகங்கள் இளையராஜாவின் சக்சஸ் . எல்லா வயதினரையும் ஈர்க்கும் வெரைட்டி தான் இளையராஜா ஸ்பெஷல்.

  பல இசை பிரபலங்களும் , சினிமா பிரபலங்களும் இன்று இளையராஜா பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அவருடைய பிறந்தநாள் ஜூன் 3 என்று பலருக்கும் தெரியும். இருப்பினும் கலைஞர் பிறந்தநாள் அதே நாளில் வருவதினால் வாழ்த்துபவர்களுக்கு வசதியாய் ஜூன் 2 முதல் பலரும் இளையராஜாவை ஒவ்வொரு ஆண்டும் அட்வான்ஸாக வாழ்த்தி வருகின்றனர். தங்களுக்கு பிடித்த இளையராஜா இசை அமைத்த பாடல்களை இணையதளத்தில் ஷேர் செய்து வாழ்த்து மழை என்பதை தாண்டி இசை மழையாக மாற்றி வருகின்றனர்.

  இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை!

  வாழ்த்து

  வாழ்த்து

  வணக்கம் இசையே! இந்த ஊரடங்கில் சற்றேனும் உள்ளடங்கிக் கிடக்க உங்கள் இசையை என் உள்ளக்கிடக்கில் பாய்ச்சி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றென் கிழக்கில் உங்கள் இசையே செந்நிறம் பாய்ச்சி பரவி விடிந்தது. "இதயம் போகுதே" .... பாடலின் இசைக் கோர்வைகளைப் பற்றி விவரித்த போது,1822-ல் SCHUBERT என்ற composer-ன் Notations-ஐ 1865-ல் பதிவு செய்ததை...அதே feeling-ல் தாங்கள் புதிய வார்ப்புகளாக்கிய விதம் கேட்போரை மெய் சிலிர்க்க வைத்தது.மெய்!

  ஆணவம்

  ஆணவம்

  நீங்கள் வரம்... தவமும் நீங்களே! (அந்த அருகதைக் கூட எங்களுக்கில்லை.)

  ஐம்பூதங்களில் ஒன்றான காற்றினை ஐயா தங்களின் இசையால் சுத்திகரித்து

  எங்கள் வாழ்க்கையில் வார்த்தையில் சுருங்கா... உணர்வாய் ஆனவருக்கு என்னைத் தெரியும் என்பதே என் ஆணவம்! (ஏதோ தோன்றியதைக் கொட்டிவிட்டேன்) என்று இயக்குனர் பார்த்திபன் கூறி உள்ளார் .

  பார்த்திபன் ஸ்பெஷல்

  பார்த்திபன் ஸ்பெஷல்

  பார்த்திபன் அவர்கள் இயக்கிய மற்றும் நடித்த பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்து உள்ளார். இளையராஜா இசை மற்றும் அவருடன் பயணித்த பல அனுபங்களை பல பேட்டிகளில் பார்த்திபன் பகிர்ந்து உள்ளார். வேறு இசையமைப்பாளருடன் ஜோடி சேர்ந்தால் இளையராஜா செல்லமாக கோபித்து கொள்வார் என்றும் பல முறை சொல்லி இருக்கிறார். ராஜா இசை அமைக்கிறார் என்று உறுதி ஆகி விட்டால் பல விநியோகஸ்தர்கள் தைரியமாக படத்தை வாங்க முன் வருவார்கள் என்றும் பல முறை சொல்லியும் உள்ளார்.

  ரசிகனின் ரசனை

  ரசிகனின் ரசனை

  இளையராஜாவின் இசை வெறும் இசையாக மட்டும் அல்லாமல் வியாபார ரீதியாகவும் பல இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை காப்பாற்றி உள்ளது. பல மொழிமாற்று படங்களுக்கும் இளையராஜாவின் இசை வெற்றியை தேடி கொடுத்து உள்ளது. ரசிகனின் ரசனை தான் வியாபாரத்தின் முதன் யுக்தி , அதை நன்கு புரிந்த பல தயாரிப்பாளர்கள் இளையராஜாவின் இசையை பல நாடுகளுக்கு கொண்டு சென்றனர் .

  குவியும் வாழ்த்து

  குவியும் வாழ்த்து

  இன்று பிறந்த நாள் காணும் இந்த ராக தேவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று இசையுடன் சமர்ப்பணம் செய்யும் பல இசை அமைப்பாளர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். மொழிக்கு அப்பாற்பட்டு மேலும் மேலும் இன்னும் நிறைய இசை சாதனைகள் இளையராஜா செய்வார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

  இறை பக்தி அதிகம் கொண்ட இளையராஜா இசையின் ராஜாவாக பல ஆண்டுகள் ஜொலிப்பார் , அவரது இசை பல நாடுகளில் மேலும் சாதனை செய்யும் என்பது தான் உண்மை.

  English summary
  Music director ilayaraja celebrates his 77th birthday today..
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X