For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாருக்கும் வரும்.. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.. கொரோனாவில் இருந்து மீண்ட இசை அமைப்பாளர்!

  By
  |

  சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இசை அமைப்பாளர், அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

  தமிழில், யுனிவர்சிட்டி, நளதயமந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி உட்பட சில படங்களுக்கு இசை அமைத்தவர் ரமேஷ் விநாயகம்.

  தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ள இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், தனது கொரோனா அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

  மக்கள் வாழ மறந்துட்டாங்க..சில லைக்ஸ்-களுக்காக மனிதத்தன்மையை இழந்துடாதீங்க.. சாடும் பிரபல ஹீரோயின்! மக்கள் வாழ மறந்துட்டாங்க..சில லைக்ஸ்-களுக்காக மனிதத்தன்மையை இழந்துடாதீங்க.. சாடும் பிரபல ஹீரோயின்!

  வீட்டை விட்டு

  வீட்டை விட்டு

  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: உடம்பு சரியில்லைன்னா, அதை பிரகடனப்படுத்தனும்னு நினைக்கல. ஆனா, இதை சொல்ல நினைக்கிறேன். ஏன்னா, இதுபற்றி நிறைய பயம் இருக்கு. லாக்டவுனுக்கு முன்னால மார்ச் 22 ஆம் தேதிதான் நான் டெல்லியில இருந்து சென்னைக்குத் திரும்பினேன். அப்ப இருந்து வீட்டை விட்டு வெளியே வரலை. என் அம்மாவோட இருந்தேன்.

  தொண்டை எரிச்சல்

  தொண்டை எரிச்சல்

  இந்த லாக்டவுன் காலத்துல யாராவது ஒருத்தர் வீட்டுல இருந்து வெளியில போறாங்க. அவங்கதான் இதுக்கான லிங்கா இருக்க முடியும். பொருட்கள் வாங்க வெளியே போன எங்க உறவினர் மூலமா அது எனக்கு வந்திருக்கணும்னு நினைக்கிறேன். அது அவருக்குத் தெரியாது. ஏன்னா, அவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை. திடீர்னு ஒரு நாள் எனக்கு தலைவலி, தொண்டை எரிச்சல் இருந்தது, லேசான காய்ச்சல் வேற.

  எந்த வாசனையும் இல்லை

  எந்த வாசனையும் இல்லை

  ஏதோ ஒரு கேபிள் எரியற மாதிரியான வாசனையை உணர்ந்தேன். பிறகு என் குடும்ப டாக்டர்ட்ட விஷயத்தைச் சொன்னதும் டெஸ்ட் பண்ணினார். ஜூன் 1 ஆம் தேதி எனக்கு கொரோனா தொற்று உறுதியாச்சு. உடனடியா என் அம்மா வீட்டுல இருந்து வேற வீட்டுக்குப் போயி என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். என் சகோதரி, வீட்டு வாசல்ல சாப்பாடு வச்சுட்டு போயிருவாங்க. எனக்கு எந்த வாசனையும் இல்லை.

  ஆக்ஸிஜன் அளவு

  ஆக்ஸிஜன் அளவு

  கடுமையான பசி இருந்தது. காய்ச்சல் மருந்து எடுத்தேன். ஆவி பிடிச்சேன். ரொம்ப சோர்வா இருந்தேன். பிறகு ஒரு நாள் என்னோட ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பிச்சது. என் மனைவி, குழந்தைகள் உட்பட எல்லாருமே பயந்தாங்க. ஏன் நான் கூட பயந்துட்டேன். இன்ஸ்டஸ்ரியில சில நெருங்கிய நண்பர்கள்கிட்ட இதுபற்றி சொல்லியிருந்தேன். எல்லோரும் என்னை இழந்திடுவோம்னு நினைச்சாங்க. ஆனா, வாழ்க்கையில பண்ண வேண்டியது நிறைய இருக்குன்னு நினைச்சேன்.

  எச்சரிக்கையா இருங்க

  எச்சரிக்கையா இருங்க

  இப்ப மீண்டு வந்துட்டேன். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்க உடலை கவனிக்கறது மட்டும்தான். அவசரத்துக்கு வெளியில போறவங்க ரொம்ப எச்சரிக்கையா இருங்க. எங்க போறீங்க, எதை தொடறீங்க, என்ன பண்றீங்க.. இதுல எல்லாம் ரொம்ப கவனமா இருங்க. ஏன்னா நீங்க கொரோனாவை வீட்டுக்கு கொண்டு வர்றவங்களா இருக்கலாம்.

  உடனடியா ஒரு கவிதை

  உடனடியா ஒரு கவிதை

  பயத்தை விட்டுட்டு நிறைய சுவாசப் பயிற்சி, சுடு தண்ணியால வாய் கொப்பளிக்கணும், ஆவி பிடிக்கணும், நுரையீரலை சுத்தமா வச்சுக்கணும், அதோட பாசிட்டிவா இருக்கணும். இது முக்கியம். முழுமையா குணமடைஞ்சதும் உடனடியா ஒரு கவிதை எழுதினேன். உங்க மனநிலையை எப்பவும் ஆரோக்கியமா வச்சுக்குங்க. இன்னைக்கு (ஜூலை 7 ) எனக்கு பிறந்த நாள். இது முதல் பிறந்த நாள் மாதிரிதான். இதை எனக்கு புதிய வாழ்க்கைன்னு நினைக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

  English summary
  Music director Ramesh Vinayakam opens about recovering from COVID-19
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X