»   »  யுவன் 36... டிவிட்டரில் கொண்டாடி வரும் "மங்காத்தா" ரசிகர்கள்

யுவன் 36... டிவிட்டரில் கொண்டாடி வரும் "மங்காத்தா" ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையுலகின் இளவரசர் என்று கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜாவின் 36 வது பிறந்தநாள் இன்று, இதனை முன்னிட்டு ட்விட்டரில் யுவனின் பிறந்தநாளை #hbdmusickingyuvan என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர் யுவனின் ரசிகர்கள்.

மேலும் அஜீத்தின் மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு யுவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று யுவனின் பிறந்தநாளை, மிகவும் விமரிசையாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் அஜீத்தின் ரசிகர்கள்.

யுவன் + அஜீத் இருவரின் ரசிகர்களும் இணைந்து கொண்டாடும் இந்தப் பிறந்தநாளில், தங்களின் மனதைக் கவர்ந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு யுவனின் பிறந்தநாளிற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.

ரசிகர்களின் ட்வீட்டுகளில் இருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

சுற்றி எங்கும் நாடகம் நடக்க

சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க என்று பையா திரைப்படத்தில் கார்த்தி தமன்னாவைப் பிரிந்து வரும் போது வரும் பாடலின் வரிகளைக் குறிப்பிட்டு யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் வழிப்போக்கன்.

மங்காத்தா படத்தின்

மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவிய யுவனின் பிறந்தநாள் இன்று என்று மங்காத்தா வின் வெற்றியில் யுவனின் பங்களிப்பைக் கூறி யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் சண்டியர்.

கண்ணாடி நீ

கண்ணாடி நீ கண்ஜாடை நான் என்று மங்காத்தா படத்தில் இடம்பெறும் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் சுட்டிப்பொண்ணு.

ஒரு நாளில்

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது என்று புதுப்பேட்டை படத்தில் வரும் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் அழகிய தமிழ்மகன்.

அது ஒரு தனி லிஸ்ட்

யுவனின் சில பாடல்களை குறிப்பிட்டு லிஸ்ட் போட்டா நீண்டு கொண்டே போகும் என்று கூறி யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் வெயில் காதலன்.

கோடானகோடி

சரோஜா படத்தில் இடம்பெறும் கோடானகோடி பாடலின் வரிகளைக் குறிப்பிட்டு யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் கார்த்திக்.

துள்ளுவதோ இளமை தொடங்கி

துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, பில்லா, 7 ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் யுவன் இசையமைத்த படங்களில் தனக்குப் பிடித்த படங்களை குறிப்பிட்டு யுவனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் நந்து.

ரசிகர்களின் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றது #hbdmusickingyuvan ஹெஷ்டேக், யுவனின் பிறந்தநாளில் ரசிகர்களுடன் இணைந்து நாமும் அவரை வாழ்த்தலாம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன் ஷங்கர் ராஜா...தட்ஸ்தமிழ்...

English summary
Music Director Yuvan Shankar Raja Birthday Special - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil