Don't Miss!
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Sports
"ஆமா.. தோனி மாதிரி தான் செய்றேன்" ஹர்திக் பாண்ட்யா மீது எழுந்து வந்த குற்றச்சாட்டு.. தடாலடி பதில்!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பழைய இளையராஜா கிடைத்துவிட்டார்! - ’சைக்கோ’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை : இசைக்கு ராஜா என்று சொல்லக்கூடிய இளையராஜாவின் பாடல்களை தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொண்ட ரசிகர்கள் ஏராளம். 80 களில் பிறந்தவர்கள் மட்டும் இன்றி, இளையராஜாவின் பாடல்களை கேட்கும் தற்போதைய தலைமுறை கூட அவரது இசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவுக்கு தனது இசையின் மூலம் மாயாஜாலம் காட்டி மக்களை சொக்க வைக்கும் திறன் படைத்த இளையராஜா, சமீபகாலமாக தனது மாயாஜால வித்தையை காட்டாமல் இருந்த நிலையில், 'சைக்கோ' படத்தின் மூலம் மீண்டும் தனது இசை ஜாலத்தால் மக்களை சொக்க வைத்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'சைக்கோ'. இதில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் ராம், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா..." என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. கபிலன் எழுதியிருக்கும் இப்பாடலை சித்து ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இப்பாடல் வெளியான நாள் முதல், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் இப்பாடல் தான் ஒலிக்கிறது.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்இந்த பாடலை ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. அதிலும், பல சினிமா பிரபலங்கள் இப்பாடலை கேட்டு, ராஜாவை கொண்டாடி மகிழ்ந்து, சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.

அப்படி என்ன இருக்கிறது, அந்த பாடலில், என்று யோசிப்பவர்கள், பாடலை ஒரு முறை கேட்டுவிட்டால் போதும், பிறகு திரும்ப திரும்ப கேட்பீர்கள். அந்த அளவுக்கு ராஜாவின் மெட்டில் வலியும், வேதனை கலந்த இனிமையும் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் முழுமையான இசையை கேட்ட சந்தோஷமும், திருப்தியையும் இப்பாடல் கொடுக்கிறது.

'நந்தலாலா', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என இயக்குநர் மிஷ்கின் - இளையராஜா கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் இசையால் பெரிதும் வரவேற்பு பெற்றது. அதிலும், 'நந்தலாலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இயக்குநர் மிஷ்கினின் நடிப்பு திறனை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணி இசை தான். அப்படத்தில் இளையராஜா அமைத்த பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க செய்ததோடு, பொறுமையாக நகரும் படத்தை ரசிகர்கள் முழுமையாக பார்க்கச் செய்ததும் இளையராஜாவின் இசை தான், என்று விமர்சகர்கள் பாராட்டியிருந்தார்கள்.

இப்படி மிஷ்கினுக்கு தனது இசை மூலம் புதிய அங்கீகாரத்தைக் கொடுத்த இளையராஜா, மூன்றாவது முறையாக மிஷ்கினுடன் இணைந்திருக்கும் 'சைக்கோ' படத்தின் பாடல் பெற்ற வரவேற்பால், அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.