»   »  முத்தமிடணும் இல்லை கர்ப்பமாக்கணும்: பெண்களை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பாலகிருஷ்ணா மீது வழக்கு

முத்தமிடணும் இல்லை கர்ப்பமாக்கணும்: பெண்களை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பாலகிருஷ்ணா மீது வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பெண்களை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி நடிகரும், தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தெலுங்கு படமான சாவித்ரியின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், படங்களில் நான் பெண்களை சும்மா துரத்தினால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

'Must Kiss Or Make Them Pregnant': Complaint against Actor Balakrishna

ஒன்று நான் அவர்களை முத்தமிட வேண்டும் இல்லை கர்ப்பமாக்க வேண்டும் என்றார். இதை கேட்டு மேடையில் இருந்த நடிகைகள் முகம் சுளித்தனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரான பாலகிருஷ்ணா பெண்களை பற்றி இவ்வாறு பேசியுள்ளது பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது. இந்நிலையில் பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நான் பெண்களை அவமதிக்க அவ்வாறு பேசவில்லை. என் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பற்றி தான் கூறினேன். மன்னித்து விடுங்கள் என்று பாலகிருஷ்ணா பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

English summary
A police complaint has been filed against actor Balakrishna for his derogatory remarks against women.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil