»   »  இதனால் என் கெரியரே போயிடும் ஆனால் 'ஐ டோன்ட் கேர்': நடிகை தில் பேட்டி

இதனால் என் கெரியரே போயிடும் ஆனால் 'ஐ டோன்ட் கேர்': நடிகை தில் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: படுக்கை பேக்கேஜ் குறித்து பேசியதால் தனது கெரியரே முடியக்கூடும், ஆனால் அது பற்றி கவலை இல்லை என்று நடிகை ஹிமா ஷங்கர் தெரிவித்துள்ளார்.

நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை படுக்கைக்கு உரிமையுடன் அழைக்கும் பழக்கம் மலையாள திரையுலகில் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அதை சில நடிகைகளே உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் படுக்கை பேக்கேஜ் குறித்து பேசிய மலையாள நடிகை ஹிமா ஷங்கர் கூறியிருப்பதாவது,

கெரியர்

கெரியர்

நான் செய்தியாளர்கள் சந்திப்பில் படுக்கை பேக்கேஜ் குறித்து பேசினேன். அதில் இருந்து பலர் மோசமாக என்னை விமர்சிக்கிறார்கள். இதனால் என் கெரியர் முடியக்கூடும். ஆனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை.

நடிப்பு

நடிப்பு

நடிப்பு என்பதும் ஒரு தொழில். ஆனால் அது உடம்பை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் தொழில் அல்ல என்பதை நான் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

திறமை

திறமை

கருத்துகளும், திறமையும் உள்ள ஒரு மனுஷி நான். நடிப்புக்காக உடலை விற்பது தவறு. பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். தங்களுக்காக போராட வேண்டும் என்றார் ஹிமா.

படுக்கை

படுக்கை

படுக்கைக்கு வந்தால் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று 3 பேர் தன்னிடம் கூறியதாக ஹிமா ஷங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Hima Shankar said that she is receiving negative comments after the package insterview. She added that this may end her career but she doesn't care.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X