»   »  இளையராஜா இசையமைக்க வரும் முன்பே அப்பா பாட வந்துவிட்டார்: எஸ்.பி.பி. சரண்

இளையராஜா இசையமைக்க வரும் முன்பே அப்பா பாட வந்துவிட்டார்: எஸ்.பி.பி. சரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பில் இருந்தே என் தந்தை பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் என எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

காப்புரிமை கேட்டு இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

இளையராஜா

இளையராஜா

இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பில் இருந்தே என் தந்தை பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். என் தந்தை பாட வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி தான் பல்வேறு நாடுகளில் எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.

பாடல்

பாடல்

இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் என் தந்தை 2 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். அது போக மற்றவர்கள் இசையில் அவர் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். நாங்கள் அந்த பாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொள்கிறோம்.

ராஜா சார்

ராஜா சார்

அப்பா இனி ராஜா சார் பாடல்களை பாட மாட்டார். ராஜா சாருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறிவிட்டார்.

பேச்சு இல்லை

பேச்சு இல்லை

இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் ராஜா சார் தரப்பில் யாரிடமும் பேசவில்லை. வக்கீல் நோட்டீஸுக்கு மட்டும் சட்டப்படி பதில் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார் சரண்.

English summary
SPB Saran said that his father SP Balasubramaniam has started singing even before Isaignani Ilaiyaraja started composing music for movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil