»   »  என் மகளை பல முறை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார்கள்: நடிகையின் தாய் கண்ணீர்

என் மகளை பல முறை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார்கள்: நடிகையின் தாய் கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை பிரதியுஷா மர்ம மரணம் உண்மையை போட்டுடைத்த அம்மா- வீடியோ

ஹைதராபாத்: என் மகளை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டார்கள். அது தற்கொலை அல்ல என்று நடிகை பிரத்யுஷாவின் தாய் தெரிவித்துள்ளார்.

மனுநீதி படம் மூலம் கோலிவுட் வந்த பிரத்யுஷா பொன்னான நேரம், கடல் பூக்கள், தவசி, சவுண்ட் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்தார். அவர் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

பிரத்யுஷா சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் பிரத்யுஷாவின் தாய் சரோஜினி தேவி தெலுங்கு மீடியாக்களிடம் தற்போது கூறியிருப்பதாவது,

கொலை

கொலை

என் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதிகாரம்படைத்த ஒரு கூட்டம் அவரை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டது. அந்த கூட்டத்திற்கு சித்தார்த் ரெட்டி உதவி செய்தார்.

சதி

சதி

என் மகளை நான் கடைசியாக பார்த்தபோது அவர் நலமாக இருந்தார். என் மகளின் மரணத்தில் சில தெலுங்கு அரசியல் கட்சிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளது. அதனால் குற்றத்தை மூடி மறைத்துவிட்டனர்.

படங்கள்

படங்கள்

என் மகளின் சினிமா வாழ்க்கை பிக்கப்பானதால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். கன்னட படத்தில் நடிக்க பெங்களூருவுக்கு கிளம்பவிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

என் மகளின் காதலை நான் எதிர்க்கவில்லை. முதலில் கெரியரில் கவனம் செலுத்துங்கள் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் கூறியிருந்தேன் என்றார் சரோஜினி.

சர்ச்சை

சர்ச்சை

பிரத்யுஷா தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் கழுத்தை யாரோ நெறித்ததால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என்றும், அவரின் உடலில் பலாத்காரம் செய்ததற்கு தடயமாக விந்து இருந்தது என்றும் பிரத்யுஷாவின் உடலை சோதனை செய்த தடயவியல் நிபுணர் முனிசாமி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Pratyusha's mother Sarojini Devi said that her daughter was repeatedly raped and killed by some powerful people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X