Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என் வாழ்நாள் ஆசை நிறைவேறியது..பொன்னியின் செல்வனில் நடித்தது பற்றி ஜெயராம் நெகிழ்ச்சி!
சென்னை: பிரபல மலையாள நடிகரான ஜெயராம் கோகுலம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் ஜெயராம், 90களில் இருந்து தமிழிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் ஜெயராம்.
பொன்னியின் செல்வன்..தமிழரின் பெருமை.. நடிகை த்ரிஷா பெருமிதம் !

தமிழிலும் ஹிட் கொடுத்த ஜெயராம்
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயராம், தமிழில் முறை மாமன், புருஷ லட்சணம், பரிவட்டம், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்சதந்திரம், பரமசிவன், துப்பாக்கி, உத்தம வில்லன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் இவர் பேசும் மலையாளம் கலந்த தமிழுக்கு பல ரசிகர்கள் உண்டு. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் .

முக்கியமான கதாபத்திரத்தில் ஜெயராம்
ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம். ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .மணிரத்தினம் இயக்கிய இந்த படத்திற்கு உலக அளவில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர். பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் எப்பொழுது இந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், நடிகர் ஜெயராம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

வாழ் நாள் ஆசை
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியன் நம்பி ஆக நடித்துள்ளார். இது குறித்து நடிகர் ஜெயராம் கூறுகையில், எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதேபோல்தான் எனக்கும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது, பொன்னியின் செல்வன் போல் ஒரு வரலாறு சார்ந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம், என் வாழ்நாள் கனவு நிறைவேறியது போல் எனக்கு இருக்கிறது என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார் நடிகர் ஜெயராம்.