உன் புருஷனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மைனாவை அக்காவாக்கிய சிவின்.. நந்தினி என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மைனா நந்தினி பங்கேற்க போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், கடந்த வாரம் ஷோ ஆரம்பிக்கும் போது அவரை எங்கே காணோம் என பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், அதிரடியாக ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக கூட இல்லாமல் கூடுதல் இணைப்பாகவே இணைந்து விட்டார்.
மைனா நந்தினியை பிக் பாஸ் போட்டியாளராக கமல் அறிவித்த நிலையில், ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.

பிரியங்கா வைப் வருதே
மைனா நந்தினி பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், ரசிகர்கள் என்ன பிரியங்காவை போலவே இவரும் செம சத்தமாக பேசுகிறாரே, அவரை போலவே ஃபன் பண்ண போகிறேன் என்றும் சொல்கிறாரே, இதெல்லாம் நடக்குமா? அல்லது நல்லா சண்டை போடுவாரா மைனா? அவருடைய கேம் எப்படி இருக்கப் போகுதுன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஆச்சி மனோரமா
கணவர் மற்றும் குழந்தையை விட்டு விட்டு ப்க் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்பதற்கும் ஆடியோ விஷுவல் மூலமாக விளக்கம் அளித்துள்ளார் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நந்தினி சினிமாவில் ஆச்சி மனோரமா மாதிரி காமெடியில் கலக்க வேண்டும் என விரும்பிகிறேன், அதற்கு இந்த பிக் பாஸ் எனக்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும் என்றே வந்திருக்கிறேன் என்று கூறினார்.

ரச்சிதா ஹேப்பியா இல்லையா
மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், சரவணன் மீனாட்சிக்கு பிறகு மீண்டும் இரு தோழிகளும் இணைந்துள்ளனர். மைனாவை ரச்சிதா வார்ம் வெல்கம் செய்தாலும், அவருக்கு பின்னால் சைகை எல்லாம் காட்டி அவரை கிண்டல் செய்ததை பார்த்த ரசிகர்கள் மைனாவின் என்ட்ரி ரச்சிதாவுக்கு ஹேப்பியா? இல்லையா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

உன் புருஷனை எனக்கு பிடிக்கும்
மைனா நந்தினியின் கணவரை தனக்கு ரொம்பவே பிடிக்கும் என சிவின் மைனாவை கட்டியணைத்து சொன்ன நிலையில், அவருக்கும் உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லி அனுப்பினார் என மைனா பதிலடி கொடுத்தார். ஆனால், அதற்கு பிறகு சிவின் சொன்னதை கேட்டு ரொம்பவே ஷாக் ஆகிவிட்டார் மைனா.

அக்காவா
நீ வருவதற்கு முன்னாடியே நான் உங்க வீட்டுக்கு போயிடுவேன் அக்கா என சிவின் செல்லமாக மைனாவிடம் பேச, ஷாக்கான அவர், யோகி நீ துரோகி ஆகிவிடுவியான்னு கேட்பதை போல பேசி விட்டு சிவினுடன் ஜாலியாக விளையாடிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


Click it and Unblock the Notifications











