twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்புக் கண்ணாடி போட்டதற்கான காரணம்.. மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!

    |

    சென்னை : இயக்குநர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.

    இவரது இயக்கத்தில் அடுத்ததாக பிசாசு 2 படம் வெளியாகவுள்ளது. இதில் ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பான கவனத்தை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    “வெள்ளாவிலவச்சு வெளுத்த புள்ளைக்கு ஹேப்பி பர்த்டே”: ஆடுகளம் டூ சபாஷ்மித்து வரை, டாப் கியரில் டாப்ஸி “வெள்ளாவிலவச்சு வெளுத்த புள்ளைக்கு ஹேப்பி பர்த்டே”: ஆடுகளம் டூ சபாஷ்மித்து வரை, டாப் கியரில் டாப்ஸி

    இயக்குநர் மிஷ்கின்

    இயக்குநர் மிஷ்கின்

    இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்தடுத்த சிறப்பான படங்களின்மூலம் இந்திய அளவில் அறியப்படுபவர். எப்போதும் தன்னுடைய கதைக்களங்களையும் காட்சி அமைப்புகளையும் வித்தியாசமாக கொடுப்பவர் மிஷ்கின். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான கவனத்தை பெற்று வருகின்றன.

    கதைக்கு உணர்வு அவசியம்

    கதைக்கு உணர்வு அவசியம்

    இவர் பன்முகக் கலைஞராக காணப்படுகிறார். அடுத்ததாக இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கவுள்ளார். இவர் தனது சமீபத்திய பேட்டியில் ஒவ்வொரு படத்திற்கும் உணர்வுள்ள திரைக்கதை மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். அப்படி இல்லையென்றால் கதை ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது என்றும் கூறியுள்ளார்.

    உதவியாளர்களை குடிக்க வைப்பேன்

    உதவியாளர்களை குடிக்க வைப்பேன்

    தன்னுடைய உதவியாளர்கள் குறித்த மிஷ்கினின் சமீபத்திய பேட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னிடம் உதவியாளர்களாக வருபவர்களை முதலில் குடிக்க சொல்வேன் என்று அவர் கூறியிருந்தார். குடித்துவிட்டு அவர்கள் உளறலாம், மனதில் உள்ளதை பேசலாம் ஆனால் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார்.

    பிசாசு 2 படம்

    பிசாசு 2 படம்

    இதேபோல சிறந்த படங்களை இயக்கத் தெரியாதவர்கள் தன்னுடைய உதவியாளரே கிடையாது என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பிசாசு 2 படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஆன்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இரவு ஷாட்கள் குறித்து மிஷ்கின் பேச்சு

    இரவு ஷாட்கள் குறித்து மிஷ்கின் பேச்சு

    இவரது படங்கள் பெரும்பாலும் இருட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதற்கு தற்போது விளக்கத்தை கூறியுள்ளார் மிஷ்கின். இரவு ஷாட்கள் பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கும் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். மனதை தாக்கும் என்றும் பல கேள்விகளை எழுப்பும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

    Recommended Video

    Mysskin தலைமையில் இந்திய ஜப்பான் நல்லுறவின் 70th anniversary |*Kollywood
    கருப்புக் கண்ணாடி போட காரணம்

    கருப்புக் கண்ணாடி போட காரணம்

    உங்களை பயமுறுத்திவிட்டு, கூடவே ஆறுதலையும் இரவு ஷாட்கள் கூறும் என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் அதிகமான வெளிச்சம் காணப்படுவதால் அதை இருட்டாக்கும்வகையில் தான் கருப்புக் கண்ணாடி போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது பிசாசு படம் இத்தகைய நைட் ஷாட்கள் அதிகமாக வைக்கப்பட்டு வெளியானது.

    English summary
    Director Myskkin on using Black glasses
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X