»   »  107 பாடல்கள் எழுதி இந்த ஆண்டும் முதலிடத்தில் நா முத்துக்குமார்!

107 பாடல்கள் எழுதி இந்த ஆண்டும் முதலிடத்தில் நா முத்துக்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையிசையில் 2014-ம் ஆண்டும் கவிஞர் நா முத்துக்குமாரின் ஆதிக்கம்தான். இந்த ஆண்டும் அவர் 35 படங்களில் 107 பாடல்கள் எழுதி முதலிடம் பிடித்துள்ளார் அவர்.

தொடர்ந்து 11வது ஆண்டாக அவர் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புள்ள பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய தள ஊடக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Na Muthukkumar retains top position in year 2014

உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014'ம் ஆண்டிலும் அதிகப் படங்கள், அதிகப் பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. 2014 ம் ஆண்டு நான், 35 படங்களில் 107 பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன்.

இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு அவர் பாடல்கள் எழுதிய படங்கள்...

1. அஞ்சான்
2. பூஜை
3. சைவம்
4. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
5. அரிமா நம்பி
6. பொறியாளன்
7. நான் சிகப்பு மனிதன்
8. காவியத்தலைவன்
9. திருடன் போலீஸ்
10. ராமானுஜம்
11. ஆள்
12. மேகா
13. மாலினி 22 பாளையங்கோட்டை (அனைத்துப் பாடல்கள் )
14. அதிதி
15. நான்தான் பாலா
16. அது வேற இது வேற
17. உயிர் மொழி ( அனைத்துப் பாடல்கள் )
18. ஜமாய்
19. நிமிர்ந்து நில்
20. டமால் டுமீல்
21. விஞ்ஞானி
22. ஞான கிறுக்கன்
23. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
24. என் காதல் புதிது ( அனைத்துப் பாடல்கள் )
25. கபடம் (அனைத்துப் பாடல்கள்)
26. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
27. பிரம்மன்
28. கோவலனின் காதலி
29. விரட்டு
30. அழகிய பாண்டிபுரம்
31. நெருங்கி வா முத்தமிடாதே (அனைத்துப் பாடல்கள்)
32. பனி விழும் நிலவு (அனைத்துப் பாடல்கள் )
33. ஆதியும் அந்தமும் (அனைத்துப் பாடல்கள் )
34. வேல்முருகன் போர்வெல்ஸ்
35. 1 பந்து 4 ரன் 1 விக்கெட்

Na Muthukkumar retains top position in year 2014

2014ம் ஆண்டு நா முத்துக்குமார் எழுதி ஹிட்டான பாடல்களில் சில...

1. ஏக்தோ தோ தீன் சார் ( அஞ்சான் )
2. தேவதையை தேட ( பூஜை )
3. இப்படியே எங்க வேணா (பூஜை )
4. வேறாரும் கண்டிராம ( பூஜை )
5. வாங்க மக்கா வாங்க ( காவியத்தலைவன் )
6. பேசாதே பார்வைகள் வீசாதே ( திருடன் போலீஸ் )
7. என்னோடு வா குத்தாட்டம் போடு ( திருடன் போலீஸ் )
8. இதயம் என் இதயம் ( அரிமா நன்பி )
9. வெண்மேகம் போலவே ( கதை திரைக்கதை வசனம் இயக்கம் )
10. வானத்துல நிலவிருக்கும் ( பிரம்மன் )
11. அழகே அழகு ( சைவம் )
12. ஒரே ஒரு ஊரில் ( சைவம் )
13. கொக்கரக்கோ ( சைவம் )
14. உன் ஆசை காதில் சொன்னால் ( நான் சிகப்பு மனிதன் )
15. இதயம் உன்னை தேடுதே ( நான் சிகப்பு மனிதன் )
16. ஏலேலோ மெதப்பு வந்துருச்சு ( நான் சிகப்பு மனிதன் )
17. ஆடு மச்சி ஆடு ( நான் சிகப்பு மனிதன் )
18. முகிலோ மேகமோ ( மேகா )
19. கள்வனே கள்வனே ( மேகா )
20. துளித் துளியாய் ( ராமானுஜம் )

இப்போது அவர் தாரை தப்பட்டை, டூரிங் டாக்கீஸ் உள்பட 101 படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டுள்ளார்.

2014-ம் ஆண்டு அவருக்கு இன்னும் ஒரு சிறப்பு கிடைத்தது. அதுதான் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக கிடைத்த தேசிய விருது. இதே பாடலுக்கு பிலிம்பேர் விருது, சைமா விருது, ஆனந்த விகடன் விருது போன்றவையும் கிடைத்தன.

கல்வியாளர் நெ து சுந்தர வடிவேலு அறக்கட்டளை விருதையும் இந்த ஆண்டு நா முத்துக்குமார் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியதும் இந்த ஆண்டுதான்.

English summary
Poet Na Muthukumar retains his top position this year too with writing highest number of songs in Tamil movies. He has written 107 songs in 35 movies in 2014.
Please Wait while comments are loading...