»   »  அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு யு சான்றிதழ்

அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு யு சான்றிதழ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அருள்நிதி நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

‘வம்சம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பேரன். வம்சம் படத்தைத் தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்ட படங்களில் அருள்நிதி நடித்திருந்தார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் சிங்கம்புலி, பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போலீஸ் வேடம்...

போலீஸ் வேடம்...

நகைச்சுவைப் படமான இதில் அருள்நிதி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் காப்பரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

யு சான்றிதழ்...

யு சான்றிதழ்...

இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரவேற்பு...

வரவேற்பு...

யூடியூபில் வெளியிடப்பட்ட டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் ரிலீஸ் ?

பொங்கல் ரிலீஸ் ?

இதற்கிடையே, டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

English summary
Directed by Sri Krishna, Naalu Policeum Nalla Irundha Oorum is a comedy drama which has Arulnithi, Remya Nambeesan and Bagavathi Perumal in significant roles. This film has music by B.R. Regin. The film went to the censors and has received a clean U certificate from the Censor Board.
Please Wait while comments are loading...