Vijay: அஜித், நயன்தாரா தெருவில் வந்தால் கூட்டம் வரும்.. விஜய்யை சீண்டிய சீமான்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. விஜய்யின் பிரச்சாரம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரையில் பார்த்த நடிகர் தெருவில் வந்தால் கூட்டம் வரதான் செய்யும் என்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில், விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சார வாகனம் உருவாக்கப்பட்டது. காலை 10:35 மணியளவில் மரக்கடை பகுதியில் விஜய்க்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக தொண்டர்கள் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்த நிலையில், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து, பிரச்சார மேடையை அடைவதற்கு கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலானது.

Vijay TVK seeman

விஜய் பிரச்சாரம்: இதைடுத்து, திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தவெக தலைவர் விஜய் விஜய், பிற்பகல் 3 மணி அளவில் பேச ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் போருக்கு போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்க. அந்த மாதிரி தேர்தலுக்கு போகிறதுக்கு முன் மக்களை பார்த்துட்டு போகலாம்னு என்று இங்கே வந்திருக்கேன். ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவங்க சொல்லுவாங்க. அதுமாதிரி திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக இருக்கும். அதற்கு உதாரணமா அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று நினைத்தது திருச்சியில் தான். எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. பெரியார் வாழ்ந்த இடம், மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. உங்களை பார்க்கும்போது மனசுக்குள் ஏதோ ஒரு பரவசம் ஏற்படுகிறது என்றார்.

கட்டுக்கடங்காத கூட்டம்: தொடர்ந்து பேசிய விஜய், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில், எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, இவை எல்லாம் என்ன ஆனது? இதை எல்லாத் செய்தார்களா.. இவை அனைத்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. ஆனார், தமிழக வெற்றிக்கழகம் கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம் என்று விஜய் பேசினார். அவரின் இந்த பேச்சை கேட்க பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தார்கள்.

சீமான் பேட்டி: இதுபற்றி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பார் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சீமான், விஜய் பரப்புரையை தொடங்கி இருக்கிறார் அவ்வளவு தான், கூட்டம் வந்ததற்கு காரணம், இதுவரை திரையில் பார்த்த நடிகர் தெருவிற்கு வரும் போது கூட்டம் வரத்தான் செய்யும். நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, எம்ஜிஆர் வருகிறார், சிவாஜி வருகிறார் என்று மணிக்கணக்கில் நின்று இருக்கிறோம். கடைசியாக அவர் வரவில்லை, அப்படியோ பரமக்குடி போய்விட்டார் என்று நாங்கள் ஏமாந்த கதை எல்லாம் இருக்கு. நடிகர் அஜித்தை இறக்கிவிட்டால் இதைவிட கூட்டம் வரும், அண்ணன் ரஜினிகாந்தை இறக்கிவிட்டால், இன்னும் கூட்டம் வரும். அதைவிட நயன்தாராவை இறக்கிவிட்டால், இரண்டு மடங்கு கூட்டம் வரும், கூட்டத்தை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X