Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆகஸ்ட்டில் நதிகளில் நீராடும் சூரியன் ஷுட்டிங்... மீண்டும் பிஸியான சிம்பு – கவுதம் மேனன்
சென்னை : ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வரிசையாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.
அம்மா அருகில் இல்லாதபோது.. தோள் கொடுத்து ஆறுதல் சொல்லும் உறவு.. அர்ச்சனா மகளின் உருக்கமான பதிவு!
வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை அக்டோபர் மாதத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆயுத பூஜை ட்ரீட்டாக சிம்புவின் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இம்மாத இறுதியில் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நதிகளில் நீராடும் சூரியனில் பிஸியான சிம்பு
மாநாடு படத்தின் ஷுட்டிங்கை முடித்த கையோடு கவுதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் சிம்பு. நதிகளிலே நீராடும் சூரியன் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் ஷுட்டிங்
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முதல்கட்ட ஃபோட்டோஷுட் இன்று நடத்தப்பட்டுள்ளது. படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

3 வது முறையாக இணையும் கூட்டணி
விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு - கவுதம் மேனன் இணையும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்னும் அறிவிப்பு வரவில்லை
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

ரெண்டு பேருமே பிஸி
கவுதம் மேனன் மற்றும் சிம்பு இணைந்து நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் பணியாற்றி வந்தாலும், கவுதம் மேனன் , திரெளபதி பட டைரக்டர் இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் முக்கிய கேரக்டரில் கவுதம் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார். இதே போல் சிம்பு மாநாடு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.