twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாமே பொய்...மானத்தை வாங்குறீங்களே...நாடியா சாங்கை கழுவி ஊற்றும் மலேசிய தமிழர்

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 12 நாட்களை கடந்து விட்டது. இறுதி போட்டியாளர்களாக 18 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், நமீதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வெளியேறியதை அடுத்து 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.

    மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ

    தற்போது இந்த சீசனின் முதல் எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து வருகிறது. முதல் வாரத்திலேயே எவிக்ஷனுக்காக 15 பேர் நாமினட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கமல் வரும் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் பிக்பாஸ் சீசன் 5 ல் முதல் ஆளாக எளிமினேட் ஆக போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

    கதை சொன்ன நாடியா

    கதை சொன்ன நாடியா

    இதற்கிடையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் கதையை சொல்லும் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான நாடியா சாங் தனது கதையை கூறினார். சிறு வயது முதலே தனது தாய் தன்னையும், தனது சகோதரிகளையும் அடித்து துன்புறுத்தியதாகவும், தனது கணவர் சாங் வந்த பிறகு தான் பாதுகாப்பான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதாகவும், கணவருக்கு பெருமை சேர்க்கவே இந்த நிகழ்ச்சிக்கு தான் வந்ததாகவும் நாடியா கூறினார்.

    புலம்பிய பிரியங்கா

    புலம்பிய பிரியங்கா

    இதைக் கேட்டு சக போட்டியாளர்களும், நெட்டிசன்களும் சாங்கை பாராட்டினர். பிரியங்கா கூட மிகவும் ஏக்கத்துடன் சாங்கை போன்ற ஒரு கணவர் கிடைத்தால், ஒவ்வொரு பெண்ணும் மிகப் பெரிய இடத்தை அடைய முடியும் என்று புலம்பிக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டது.

    பொய்யான கதையா

    பொய்யான கதையா

    இந்நிலையில் நாடியா கூறிய கதை பொய்யானது என மலேசிய தமிழர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று, சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர், எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது. என்ன சொன்னாலும் நம்புவாங்கன்னு நினைப்பா. போனா போகிறது மலேசியாவில் இருந்து சென்ற போட்டியாளர் ஆயிற்றே ஆதரவு கொடுக்கலாம் என நினைத்தால், ஓவராக பேசுறீங்க. டிவி.,க்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா. இதில் மலேசிய போலீசை வேறு அசிங்கப்படுத்தி இருக்கீங்க.

    பெரிய கேஸ்ல மாட்டுனீங்களா

    பெரிய கேஸ்ல மாட்டுனீங்களா

    18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலையே கொடுக்க மாட்டார்கள் மலேசியாவில். நீங்க எப்படி 15 வயதிலேயே வேலைக்கு போனீர்கள். அதுவும் ஓட்டலில் ஹவுஸ்கீப்பிங் வேலை. அதை விட மலேசிய போலீசிடம் உங்க அம்மா அடி வாங்க விட்டு வேடிக்கை பார்த்ததாக கூறி உள்ளீர்கள். அதுவும் 12 - 13 வயதில். சேட்டை செய்து தெருவில் சுற்றும் ஆம்பள பசங்க எங்களையே சாப்பாடு போட்டு கவனித்து, வீட்டில் வந்து விட்டு போனார்கள். பெண் பிள்ளைகளை எப்படி மலேசிய போலீஸ் அடித்திருப்பார்கள். அப்படியானால் ரொம்ப பெரிய கேசில் மாட்டிக்கிட்டீங்களோ.

    மானத்தை வாங்குறீங்களே

    மானத்தை வாங்குறீங்களே

    அது எப்படி இந்திய போட்டியாளர்கள் யாரும் தங்களின் பெற்றோர்களை விட்டுக் கொடுப்பதில்லை. மலேசிய போட்டியாளர்களுக்கு மட்டும் ஒன்று அப்பா சரியில்லாமல் இருக்கிருக்கிறார் அல்லது அம்மா சரியில்லாமல் இருக்கிறார். பெற்றோர்கள் இல்லை உங்களை பெற்ற நேரம் தான் சரியில்லை. பெற்றோர்கள் எப்படி இருந்தாலும் இப்படியா டிவி.,யில் சொல்லி மானத்தை வாங்குவீர்கள்.

    சாங் சீனரே கிடையாது

    சாங் சீனரே கிடையாது

    நாடியா சொல்வதை போல் அவரது கணவர் சீனரோ, தமிழ் தெரியாதவரோ இல்லை. அவர் நண்பருடன் ஒரே பள்ளியில் படித்தவர் தான். நன்றாக சரளமாக தமிழ் பேசுவார். அதுவும் செந்தமிழில் பேச தெரிந்தவர். வெளி ஆட்களிடம் பூ சுற்றலாம். கதை தெரிந்தவர்களிடம் பூ சுற்றினால் எப்படி. நல்லபடியாக விளையாடி ஜெயிச்சுட்டுவாங்க என்றால், இது என்ன கேவலமான ஸ்டாடர்ஜியா. எனக்கு தெரிந்த வரை அவங்க அம்மாவும், அப்பாவும் ரொம்ப தங்கமானவங்க.

    வாங்க காப்பு காத்திருக்கு

    வாங்க காப்பு காத்திருக்கு

    ஒரு போட்டிக்காக எவ்வளவு கேவலமாக போறீங்க. ஒரு பெண் பிள்ளையை மலேசிய போலீஸ் அடித்தார்கள் என்று சொன்னதை தான் என்னால் ஏற்க முடியவில்லை. வெளிய வாங்க. காப்போடு காத்திருக்கிறார்கள் மலேசிய போலீஸ் என பேசி உள்ளார். ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்தும், பகிர்ந்தும் வருகிறார்கள்.

    English summary
    Malaysia tamilian's video spread in around social media. he claims that bigg boss 5 contestant nadia chang's story is a fake one. He says that she has insulted and has given a false information about malaysian police. He also says that her husband chang is not a pure chinese. He knows Tamil very well and can speak very good Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X