»   »  செலிபிரிட்டி கிரிக்கெட்டை தொடர்ந்து வருகிறது செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டி

செலிபிரிட்டி கிரிக்கெட்டை தொடர்ந்து வருகிறது செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் நடத்திய செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டியும் நடைபெறவுள்ளது.

செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் சீசன் (CBL) என்ற பெயரில், நடிகர் சங்கம் பேட்மின்டன் போட்டியை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற இடங்களில் நடத்தவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மலேசியாவில் உள்ள கோலம்பூரில் நடக்கும் இறுதி போட்டியில் கலந்துகொள்வார்கள்.

Nadigar Sangam to conduct Celebrity Badminton league

தெலுங்கு நடிகர்கள், கன்னட நடிகர்கள் மற்றும் மலையாள நடிகர்களுடன் போட்டியிடு தமிழ் நடிகர்கள் போட்டியிடுகிறார்கள். நேற்று சென்னையில் நடைப்பெற்ற போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில், நடிகர் நாசர் சென்னை அணி சார்பாக விளையாடும் வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த அணிக்கு சென்னை ராக்கர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

சென்னை அணியின் கேப்டனாக ஆர்யாவும், அவருடன் பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடவுள்ளனர். இந்த அணியின் விளம்பர தூதராக நடிகர் மாதவனும், ஊக்குவிப்பவராக நடிகை அமலா பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 18-ல் இப்போட்டிகள் தொடங்கப்படவுள்ளது.

இவ்விழாவில் அணியினரை அறிமுகப்படுத்திய கையோடு நடிகர் நாசர் கூறுகையில்,

''நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் பெற்று வந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் சிந்து! அந்த மகிழ்ச்சியுடன் இந்த அணியினரை அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். நடிகர் சங்க வளாகம் கட்டுவதற்காக என் பிள்ளைகள் ஒன்றாக களமிறங்கி கிரிக்கெட் விளையாடியதை என்னால் மறக்கவே முடியாது. அந்த போட்டி மூலம் எங்களுக்குள் மேலும் ஒரு அந்நியோன்யம் பிறந்தது. இந்த பாட்மின்டன் போட்டியில் விளையாடவிருக்கும் அனைவரும் போட்டியில் சிறப்பாக விளையாடி, வெற்றிவாகை சூட என் வாழ்த்துக்கள்'' என்றார்.

English summary
Nadigar sangam is conducting Celebrity Badminton League to raise fund for the sangam building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil