»   »  நடிகர் சங்க தேர்தலில் சந்தித்த நட்சத்திரங்களின் மலரும் நினைவுகள்

நடிகர் சங்க தேர்தலில் சந்தித்த நட்சத்திரங்களின் மலரும் நினைவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட நாட்களாக காணமல் போயிருந்த நடிகர்கள், நடிகைகள் எல்லோரையும் சந்திக்க வைத்து அவர்களின் அந்த நாள் நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது நடிகர் சங்கத் தேர்தல்.

தமிழ்சினிமாவில் காந்தக் கண்ணழகிகள் பலர் இருந்தாலும் 80களில் சரிதாவும், 90 களில் பானுப்பிரியாவும் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த கண்ணழகிகள் என்றால் மிகையாகாது. ஒரு பார்வை பார்த்த போதும்யா... கண்ணு நடிக்குதுப்பா என்று உருகி உருகி பேசுவார்கள். சரிதாவும், பானுப்பிரியாவும் சினிமாவில் நடித்துவிட்டு திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆனாலும் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்தார்கள். சீரியல்களில் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைத்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஊடக வெளிச்சத்தில் படாமல் காணமல் போய்விட்டார்கள்.

அதேபோல பல நடிகர்கள், நடிகைகள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்தது நடிகர் சங்கத்தேர்தல். சரத்குமார், விஷால் அணிகளுக்கு இடையேயான பலத்தை நிரூபிக்கும் போர்களமாக நடிகர் சங்கத் தேர்தல் மாறினாலும் கடந்த 18ம் தேதி மிகப்பெரிய நட்சத்திர கலைவிழா நடைபெற்றது போலவே இருந்தது வாக்குப்பதிவு மையம்.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பா பள்ளி வளாகம் ஞாயிறன்று காலை 5 மணி முதலே பரபரப்பாகிவிட்டது. காவல்துறை வாகனங்கள் ஒருபுறம் அணிவகுக்க... ஊடகத்துறையின் வாகனங்களோ வரிசை கட்டி நின்றன. 3000 பேர் ஓட்டுப்போட வரும் இடத்திற்கு 300 போலீசார் காவலுக்கு வந்திருக்க 200 செய்தியாளர்கள் கவரேஜ்க்கு வந்திருந்தனர். 9 ஆண்டுகளுக்கப் பின்னர் நடந்த தேர்தல் என்பதால் ரஜினி, கமல், விஜய் என பிரபலங்கள் வாக்கு போட்டு விட்டு செல்ல 8 மணிக்கு மேல் எண்பதுகளில் நடித்த நடிகைகள் வரிசை கட்ட ஆரம்பித்தனர்.

அம்பிகா, ராதா

அம்பிகா, ராதா

எண்பதுகளில் கொடி கட்டிப்பறந்த அக்கா, தங்கை நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் வாக்குப் பதிவு மையத்திற்கு வந்தனர். குவிந்திருந்த போலீசாரோ, உறுப்பினர் அட்டையைக் காட்டினால்தான் உள்ளே விடுவோம் என்று வம்பு பண்ண ஒருவழியாக சமாளித்து வரிசையாக நின்றிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். நம்ம வீட்ல நடக்கிற சண்டை மாதிரிதான் இதுவும், நீங்கதான் இதை பெருசு பண்றீங்க என்றார் ராதா.

பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?

பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?

ஓட்டுப்போட வந்திருந்தவர்களை கார்த்தி ஓடி ஓடி உபசரிக்க... சிறந்த நடிகை என்று தேசிய விருது வாங்கிய அர்ச்சனா, சுஹாசினி, ரேவதி, ஈஸ்வரி ராவ் ஆகிய நான்கு பேரும் மர நிழலில் நின்றுகொண்டு அந்தக்கால நினைவுகளை அசைபோட்டனர்.

லட்சுமி, ஐஸ்வர்யா

லட்சுமி, ஐஸ்வர்யா

அதோ லட்சுமி வர்றாங்க என்று சொல்ல... கூடவே அவரது மகள் ஐஸ்வர்யாவும் வந்தார். வென்னிற ஆடை நிர்மலா உதவியாளர் ஒருவருடன் ஓட்டு போட வந்தார். ஆர்வத்துடன் ஓட்டுப்போட வந்த சச்சுவுக்கு ஓட்டு இல்லை என்று கூறவே, டென்சனோடு வந்து கார்த்தியிடம் முறையிட்டார்.

நட்சத்திர கலைவிழா

நட்சத்திர கலைவிழா

சரிதா, சீதா, விசித்ரா, ஷகீலா, பானுப்ரியா, சரத்பாபு, சுலக்‌ஷனா, ஆகியோர் நீண்ட காலம் கழித்து சந்தித்து உரையாடியது இது நடிகர் சங்கத் தேர்தலா, நட்சத்திர கலைவிழா என்று யோசிக்க வைத்துவிட்டது.

வீல் சேரில் வினுச்சக்கரவர்த்தி

வீல் சேரில் வினுச்சக்கரவர்த்தி

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினுசக்கரவர்த்தி, வீல் சேரில் ஓட்டுப்போட வந்தார், பல நடிகர்கள் ஆர்வத்துடன் அவரை நலம் விசாரித்தனர். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிவிட்ட ஜனகராஜ், ஓட்டு போட வந்த போது அவரது சமகால நட்சதிரங்கள் அவரை சூழ்ந்துகொண்டு குசலம் விசாரித்தனர்.

இது ரொம்ப முக்கியமா?

இது ரொம்ப முக்கியமா?

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தொடர் நேரலைகள்... நிமிடத்திற்கு நிமிடம் நட்சத்திரங்களின் பேட்டிகள் என விறுவிறுப்பை கூட்டின ஊடகங்கள். இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? என்று சமூக வலைத்தளங்களில் கருத்து போட்ட கந்தசாமிகளும், வாக்குபதிவு மையத்தில் நடந்தவற்றை சுடச்சுட பார்த்து ரசித்தனர். எப்படியோ இந்த வார ஞாயிறு அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை செம எண்டர்டெயின்மென்ட் ஆகிவிட்டது தமிழக தொலைக்காட்சி ரசிகர்களுக்கு.

English summary
The 2015 Nadigar Sangam election will go down in the history as a fiercely contested polls where bitter war-of-words were exchanged between Sarath Kumar's team and the Pandavar Ani. The election for the the actors' artistes guild have always taken place peacefully but this time it created quite a stir.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil