»   »  விவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு!

விவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்க்கு நடிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Nadigar Sangam extends support to farmers Bandh

அதில், "பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது," என குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam has extended its support to bandh protests in support of Tamil Farmers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil