»   »  இரட்டிப்பு மகிழ்ச்சி...- முதல்வருக்கு நடிகர் சங்கம் நன்றி

இரட்டிப்பு மகிழ்ச்சி...- முதல்வருக்கு நடிகர் சங்கம் நன்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரமாண்ட விழாவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Nadigar Sangam happy over CM's announcement

தமிழக வரலாற்றில் பாரம்பரியமிக்க சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் 'டாக்டர் அம்மா' அவர்கள் இன்று கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப் பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

இந்த விருதுகள் மூலம் பல கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஒரு உந்து சக்தியாக இது இருக்கும்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா தங்கள் பொற்கரங்களால் நிகழவிருக்கும் இதே காலக் கட்டத்தில், இந்த விருது எங்களை போன்ற கலைஞர்களுக்கு இரட்டிப்பு சந்தோசமாக இருக்கிறது.

மாண்புமிகு 'தமிழ்நாடு முதலமைச்சர்' டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Nadigar Sangam has conveyed its thanks and happiness to CM Jayalalithaa for announcing award distribution.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil