»   »  6 வது முறையாக முதல்வரான அம்மாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்- நடிகர் சங்கம்

6 வது முறையாக முதல்வரான அம்மாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்- நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''6 வது முறையாக முதல்வரான அம்மாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 2 வது முறையாக அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதன்மூலம் 6 வது முறையாக ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

Nadigar sangam has wished CM Jayalalithaa for her win in TN Elections

இதற்காக ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் நடிகர் சங்கம் சார்பிலும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு 'தமிழ்நாடு முதலமைச்சர்' டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 6 வது முறையாக தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

இதுதவிர நடிகர் விஷால் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா, கருணாஸ் இருவரையும் வாழ்த்தியிருக்கிறார்.

முன்னதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) அம்மாவுக்குக் கிடைத்த வெற்றியை, தாங்கள் மனசாரக் கொண்டாடுவதாகக் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Nadigar sangam has wished CM Jayalalithaa for her historic win in TN Elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil