»   »  ஜல்லிக்கட்டு: நடிகர் சங்க போராட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பார்களா, இல்லை..?

ஜல்லிக்கட்டு: நடிகர் சங்க போராட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பார்களா, இல்லை..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக படித்தவர்கள், படிக்கும் மாணவர்கள், தமிழ் உணர்வுமிக்க இளைஞர்கள் மாபெரும் புரட்சி நடத்தி வருகிறார்கள். மெரினா கடற்கரையில் தொடர்ந்து நடந்து வரும் அறவழிப் போராட்டம் நாட்டு மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் நாளை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. மெரினாவில் புரட்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நடிகர் சங்க போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மெரினா

மெரினா

உண்மையான தமிழ் உணர்வோடு போராட நினைத்தால் மெரினா வந்து எங்களுடன் போராடுங்கள். பப்ளிசிட்டி மற்றும் மீடியாவின் கவனத்தை ஈர்க்க தனியாக பெயருக்கு ஒரு நாள் போராட வேண்டாம் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

நாளை நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொள்வார்களா இல்லை ஆதரவு தெரிவித்ததோடு சரியா என்பதை தெரிந்து கொள்ள மாணவ புரட்சியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நடிகர்கள்

நடிகர்கள்

நாளைய போராட்டத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை புரட்சியாளர்கள் கவனிக்க உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களை கணக்கு எடுத்து அதை மனதில் வைத்து செயல்பட உள்ளனர்.

சிம்பு, ஜி.வி.

சிம்பு, ஜி.வி.

விளம்பரம் தேடாமல் தமிழ் உணர்வுக்காக போராடுபவர்களாக இருந்தால் நடிகர்கள் சிம்பு, ஜி.வி. பிரகாஷ், ராகவா லாரன்ஸ் போன்று புரட்சியாளர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டியது தானே என்றும் மாணவச் செல்வங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Will superstar Rajinikanth and Kamal Haasan turn up at Nadigar Sangam's protest in support of Jallikattu?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil