twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவுக்கு நாளை நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி!

    By Shankar
    |

    சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் நாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    ரஜினிகாந்தின் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இந்த அஞ்சலி கூட்டம் நடக்கிறது.

    Nadigar Sangam's Condolence meet for late CM Jayalalithaa

    இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிக்கை:

    நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவர்தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பெருமைகளைப் பதிவு செய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

    கலைக்காகவும், பொதுப் பணிக்காகவும் தம் வாழ்வனைத்தும் அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள், உறுப்பினர் அல்லாத நடிகர்கள், திரையுலக ஜாம்பாவான்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Nadigar Sangam has arranged a condolence meeting to late CM Jayalalithaa on Sunday evening 5PM

    English summary
    Nadigar Sangam has arranged a condolence meeting to late CM Jayalalithaa on Sunday evening 5PM
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X