»   »  நட்சத்திர கிரிக்கெட்... நடிகர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!- நடிகர் சங்கம்

நட்சத்திர கிரிக்கெட்... நடிகர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!- நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திர கிரிக்கெட் மூலம் மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று ஒரு பக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதில் தவறென்ன இருக்கிறது? நடிகர்கள் தங்கள் நலனுக்காக, நலிந்த நடிகர்களைக் காக்கத்தானே நிதி திரட்டுகிறது. அவர்களும் பொதுமக்கள்தானே என்று திருப்பிக் கேட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள ஒரு அறிக்கை நட்சத்திர கிரிக்கெட் விஷயத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

Nadigar Sangam's explanation on Star Cricket

அந்த அறிக்கை:

வணக்கம்...

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்.

ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID, PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

அதே போலத் தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிக்கெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.

நடிகர் சங்கக் கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. மக்களை மகிழ்விப்பவர்கள் அவர்கள். தங்களை ரசிக்கிற, நேசிக்கிற மக்களிடம் உதவி கேட்பதை தவறாகப் பார்க்கக் கூடாது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் இன்னொரு பகுதி விவகாரமானது. அதை அடுத்து தருகிறோம்.

English summary
Nadigar Sangam has gave an explanation for their proposed Star Cricket event. It says that there is nothing wrong in collecting money from public for Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil