»   »  நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'குரு தட்சணைத்' திட்டத்தின் நிறைவு விழா அடுத்த வாரம் நடக்கிறது.

கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு, மேனகா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள 1000 உறுப்பினர்களின் முழு விபரங்களுடன் இணைய தளத்தில் பதிவிடுவதற்கு அவர்களின் புகைப்படம் வீடியோ அனைத்தும் சேகரிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ,செயற்குழு உறுப்பினர்களில் நடிகர்களாக உள்ள பூச்சி முருகன், 'கோவை' சரளா, பசுபதி, மனோபாலா, ஸ்ரீமன், 'பருத்திவீரன்' சரவணன், உதயா, நந்தா, ரமணா, பிரேம்குமார், விக்னேஷ், லலிதா குமாரி, சங்கீதா, ராதா, ஹேமச்சந்திரன் அயூப்கான், ஆகியோர் பல குழுக்களாக பிரிந்து சென்று தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள் 1000 பேரின் முழுமையான விபரங்கைளை சேகரித்து வந்துள்ளனர்.

இதனது இறுதிக்கட்டமாக விடுபட்ட உறுப்பினர்களின் தகவல் சேகரிக்க வருகிற 6,7,8 தேதிகளில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.

அதனது நிறைவு நாளை நடிகர் பிரபு, நடிகர் சத்யராஜ், நடிகர் நிழல்கள் ரவி, நடிகை சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு நடத்தி வைக்கிறார்கள்.

English summary
Nadigar Sangam's Guru Dhakshanai scheme completion event will be held on Feb 6, 7, 8 in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil