»   »  நடிகர்களுக்கு தீபாவளிப் பரிசு விநியோகம் தொடங்கியது!

நடிகர்களுக்கு தீபாவளிப் பரிசு விநியோகம் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை ரூபாய் 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூபாய் 25 லட்சம் செலவிலான பரிசு பொருட்களுள் எம். சி. ஆர். வேஷ்டிகள் நிறுவனத்தாரின் வேஷ்டிகள், கோவை அட்வான்ஸ் குலோத்தி பாக்டரி நிறுவனத்தாரின் சட்டைகளும், சேகர் எம்போரியம் நிறுவனத்தாரின் சேலைகள் மற்றும் நடிகர் சங்க அலுவலக நிர்வாகிகளின் சார்பிலான இனிப்பு பெட்டிகளும் அடங்கும்.

Nadigar Sangam starts Diwali gift distribution

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் தீபாவளி சிறப்பு பரிசான வேஷ்டி,சட்டை,சேலை மற்றும் இனிப்பு ஆகியவைகளை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான 2000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

Nadigar Sangam starts Diwali gift distribution

நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்று பரிசுப் பொருள் பெற்றவர்களில் 400 பேர் வாக்குரிமை இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மற்ற மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் சென்று தீபாவளி பரிசு பொருட்களை வழங்கவுள்ளனர்.

Nadigar Sangam starts Diwali gift distribution

அந்த வகையில் கோவையில் நடிகை கோவை சரளா, நடிகர் ரமணா, சேலத்தில் விக்னேஷ், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடிகர் பசுபதி, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் செயற்குழு உறுப்பினர் நடிகர் தண்டபாணி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூரில் காமராஜ், மதுரையில் நடிகர் கருணாஸ், திருச்சியில் நியமன செயற்குழு உறுப்பினர் ஜெரால்ட் ஆகிய நிர்வாகிகள் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு பொருட்களை வழங்கவுள்ளனர்.

Nadigar Sangam starts Diwali gift distribution
English summary
Diwali gifts distribution has been started at Nadigar Sangam campus today morning and over 2000 members received the gifts.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil