»   »  சசிகுமார் - சமுத்திரக்கனி இணையும் 'நாடோடிகள் 2'... பிப்ரவரியில் ஷூட்டிங்!

சசிகுமார் - சமுத்திரக்கனி இணையும் 'நாடோடிகள் 2'... பிப்ரவரியில் ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், தரணி, அனன்யா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'நாடோடிகள்'. தமிழ் சினிமாவில் நட்புக்கு புது இலக்கணம் வகுத்துக்கொடுத்த இந்தப் படம் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சசிகுமார், சமுத்திரக்கனி ஆகிய இருவருக்கும் தனி அடையாளத்தை, அங்கீகாரத்தை இப்படம் வழங்கியது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'நாடோடிகள்' படத்தின் அடுத்த பாகம் இப்போது தயாராகவுள்ளது. 'நாடோடிகள் 2' படத்தை உருவாக்க சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார்.

 Nadodigal 2 shooting starts on February

'நாடோடிகள்', 'போராளி' ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தை இயக்குவதோடு, தயாரிப்பிலும் சமுத்திரக்கனியே ஈடுபடுகிறார்.

விரைவில் 'நாடோடிகள் 2' படக்குழு தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2' உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

English summary
Samuthirakani is planning to direct 'Nadodigal 2' film. Sasikumar acting in Samuthirakani' s 'nadodigal 2'. The shooting of the film will be started on February.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X