»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வந்த நடிகை நளினிக்கும், நடிகர் ராமராஜனுக்கும் பெண்கள் தினமான மார்ச் 8 ம் தேதிவியாழக்கிழமை சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

1987 ம் ஆண்டு நடிகர் ராமராஜனும், நடிகை நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மிகவும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு அருண் என்றும், மகளுக்கு அருணாஎன்றும் பெயர் வைத்தனர்.

அருணும், அருணாவும் இப்போது 10 ம் வகுப்புப் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நளினிக்கும், ராமராஜனுக்கும் இடையே மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவது என முடிவுசெய்தனர். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்க முயன்றனர். அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, இருவரும் கடந்த ஜூலை மாதம் சென்னை முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர்.

அதில், திருமண வாழ்க்கையில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்புகள் ஏற்பட்டதால் நாங்கள் பிரிந்து வாழ நினைக்கிறோம். நாங்கள்சந்தோஷமாகப் பிரிகிறோம். எங்களுக்கு விவாகரத்து வழங்குங்கள் என்று கூறியிருந்தனர்.

மேலும், ராமராஜன் தனது மனுவில், நளினிக்கு ரூ 7 லட்சம் ஜீவனாம்சத் தொகையாகவும், குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ 10 லட்சமும்வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஜனவரி மாதம் குடும்ப நல நீதிபதி சவுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சவுந்தர்ராஜன் இருவரையும்தனித்தனியே அழைத்துப் பேசினார்.

காதல் திருமணம் செய்து கொண்டுள்ள நீங்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? உங்களது குழந்தைகளின் நலனை முன்னிட்டாவது நீங்கள் விவாகரத்து செய்துகுறித்து நன்கு ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொணடார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இருவரும் விவகரத்து செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்தனர். அப்போதுராமராஜன், நளினி ஆகிய இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் மதுரையில் உள்ள தனது சொத்துக்கள், தியேட்டர் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும்போது அவற்றை உடனடியாக விற்று, இருகுழந்தைகள் பேரிலும் தலா ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்கிறேன் என்றும், அதுவரை குழந்தைகள் இருவருக்கும் மாதாமாதம் ரூ 10,000கொடுக்கிறேன் என்றும் ராமராஜன் கூறியிருந்தார். இந்த மனுவில் தனக்கு ஜீவனாம்சத் தொகை வேண்டாம் என்றும் நளினி கூறியிருந்தார்.

இதையடுத்து, வழக்கை மார்ச் 8 ம் தேதித்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதையடுத்து இந்த மனு பெண்கள் தினமான மார்ச் 8 ம் தேதி வியாழக்கிழமை குடும்ப நல நீதிபதி சவுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர்ராஜன் கூறுகையில், நீங்கள் இருவரும் விவாகரத்து வேண்டும் என்ற உங்களது முடிவிலிருந்து பின்வாங்காமல் இருப்பதால்,கோர்ட் உங்களுக்கு விவாகரத்து வழங்குகிறது.

ராமராஜன் 3 வருடங்களுக்குள் தனது குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும். அதுவரை மாதாமாதம் ரூ 10, 000கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் இருவரும் நளினியிடம் இருக்கட்டும். ராமராஜன் எப்போது வேண்டுமானாலும் அவர்களைப் பார்க்கலாம். இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டது.

இதையடுத்து நளினி நிருபர்களிடம் கூறுகையில், என் வாழ்க்கையில் நடந்தது போன்ற கசப்பான சம்பவம் வேறு யார் வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது.பெண்கள் தினமான இன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. மறுமணம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்றார்.

ராமராஜன், தான் எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி விட்டு தனது காரில் ஏறிச் சென்று விட்டார்.

நளினி, ராமராஜனுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர்களது குழந்தைகள் அருண், அருணா ஆகியோர் நீதிமன்றத்துக்குவரவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil