Don't Miss!
- News
இடைத்தேர்தலில் ‘சோலோ’வாக களமிறங்க ரெடி..? ஆலோசிக்கும் தேமுதிக! அதுவும் அதே நாளில்.. ஓஹோ.. ரைட்டு!
- Sports
72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!
- Lifestyle
ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் போது மட்டும்தான் இந்த விஷயங்களை செய்வார்களாம் தெரியுமா?
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Technology
வாங்கிடாதீங்க.. அசல் விலையை விட ரூ.10,000 கம்மி விலைக்கு கிடைக்கும் இந்த போனை வாங்கிடாதீங்க! ஏன்?
- Finance
ஒரு குரங்கு குல்லா 40000 ரூபாய்.. ஒரு ஸ்டிக்கர் மட்டும் தான் எக்ஸ்ட்ரா..!
- Automobiles
இனி புதுசா வரப்போற கார் எதுலயும் இந்த பிரேக் இருக்காது! சென்னை நிறுவனம் வேற லெவல்ல ஒன்ன தயாரிச்சிருக்காங்க!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
பாலிவுட்டில் பட்டய கிளப்பிய நம்ம ஊரு ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்..பிஜிஎம்-ன் ரியல் ஹீரோ
'விக்ரம் வேதா' மூலம் இந்தியிலும் தடம் பதித்த தமிழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், தமிழ் திரைப்படத்துறையால் அங்கிகரிக்கப்படாமல் இருக்கிறார்.
பிஜிஎம் இசையின் மன்னனாக இருக்கும் சாம்.சி.எஸ், இசையமைத்த முக்கியமான படங்களை ரசிகர்கள் அறியாததால் அவர் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு விக்ரம் வேதாவில் அவர் போட்ட பிஜிஎம் ரசிகர்களால் மட்டுமல்ல திரைத்துறையினராலும் ரசிக்கப்பட்டது.
விக்ரம் வேதா படம் நல்லாத்தான் இருக்கு..இருந்தாலும் வசூலில் தடுமாறுவது ஏன்?

பாலிவுட்டில் முத்திரைப்பதித்த விக்ரம் வேதா
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் தமிழில் சாதனை படைத்த இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகிய இருவரும், இந்தியிலும் தங்களது புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

5 ஆண்டுகளுக்கு முன் போட்ட பிஜிஎம் கலக்கிய சாம் சி.எஸ்
2017 ஆம் ஆண்டு புஷ்கர்-காயத்ரி தம்பதி இயக்கத்தில் விக்ரம் வேதா படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படம் வித்யாசமான கதை அமைப்பு, த்இரைக்கதை பாணி, விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பு, பின்னணி இசை, குறிப்பாக பிஜிஎம் போன்றவைகளுக்காக சிறப்பாக ஓடியது. முதல்பாகம் முடிவுறாமல் இரண்டாம் பாகமாக தொடர்வதுபோல் படத்தை முடித்திருப்பார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் சின் அற்புதமான பிஜிஎம் யுவன் ஷங்கர் ராஜாவிடம் கூட இல்லை எனும் அளவுக்கு இருந்தது.

கைதி படத்தின் இசையமைப்பாளரும் இவரே. சாம் சி.எஸ். கண்டுக்கொள்ளாத ரசிகர்கள்
விக்ரம் வேதா படத்தின் இசையை பலரும் யுவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப்படத்துக்கு பின் சாம்.சி.எஸ் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நோட்டா, அடங்க மறு, 100, தேவி.2 ஆகிய படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. அதே நேரம் அவர் ஒரு முக்கியமான படம் ஒன்றுக்கு இசை அமைத்தார், அந்த இயக்குநரின் அடுத்த படம் அனிருத் இசை பெரிதாக பேசப்பட்டது. அவரது முந்தைய படத்துக்கு சாம் சி.எஸ் போட்ட இசை படத்துக்கு தனியாக வலு சேர்ந்தது. அந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த படம் கைதி. கைதி படத்தின் பிஜிஎம், பின்னணி இசை கலக்கலாக இருக்கும். இத்தனை செய்தும் இதுவரை ஏனோ தமிழ் ரசிகர்கள் சாம் சி.எஸ் ஐ கொண்டாடாமல் இருக்கின்றனர்.

பாலிவுட்டில் பாராட்டுப்பெற்ற புஷ்கர்-காயத்ரி, சாம் சி.எஸ்
புஷ்கர் காயத்ரி தம்பதி இயக்கத்தில் தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' எனும் திரைப்படம், இந்தியில் மறு உருவாக்கத்தின் போது ஹிருத்திக் ரோஷன், சயீப் அலி கான் ஆகிய இரண்டு நட்சத்திர நடிகர்களும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, இந்தி திரையுலக ரசிகர்களுக்காக சிற்சில மாற்றங்களை செய்து, 'விக்ரம் வேதா' திரைப்படத்தை உருவாக்கியிருந்தனர். இப்படத்திற்கு இந்தியில் நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். தமிழில் பிஜிஎம்மில் கலக்கி, இசைஜாலம் செய்த இசையமைப்பாளர் சாம் சி எஸ்-ன் பிஜிஎம்முக்காகவே அவரை இந்தியில் 4 இசையமைப்பாளர்களில் ஒருவராக இணைத்துள்ளனர்.

பாலிவுட்டை பிஜிஎம் மூலம் கலக்கிய சாம் சி.எஸ்
'விக்ரம் வேதா' இந்தியில் வெளியானவுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி நேர்த்தியாக இயக்கியிருந்ததாகவும், படத்தின் வெற்றிக்கு சாம் சி எஸ் அவர்களின் நுட்பமான பின்னணியிசையும் காரணம் என்றும் ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். 'விக்ரம் வேதா' படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையிலும், கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கென பிரத்யேகமாகவும், கதைச் சம்பவங்களுக்கென தனித்துவமாகவும் என பின்னணி இசையில் பிஜிஎம் மூலம் தன் ராஜாங்கத்தை நடத்தி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் சாம் சி.எஸ். 'விக்ரம் வேதா' படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்பிற்கு இசையமைத்ததன் மூலம் சாம் சி எஸ்ஸின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.