»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வாவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கியுள்ளது.

இதற்கிடையே அவரது தோழி நடாஷாவிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன்ஆகியோர் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

காதல் பட இசையமைப்பாளர் ஜோஸ்வாவும், அவரது தோழியான நடாஷாவும் சமீபத்தில் தலைமறைவாயினர்.இதைத் தொடர்ந்து நடாஷாவின் தாயார், பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஜோஸ்வாவை போலீஸார் கைது செய்தனர். நடாஷா போலீஸ் பாதுகாப்பில்அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம்சார்பில் சுதா ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடாஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பொதுவாக விசாரணை நடத்திய நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பனும், நடாஷாவிடம் இன்று தங்களதுஅறையில் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

ஜோஷ்வாவுக்கு ஜாமீன்:

இதற்கிடையே ஜோஷ்வாவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜோஷ்வா, தன்னை ஜாமீனில் விடக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கனவே நிராகக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜோஷ்வா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன்,ஜோஷ்வாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Read more about: chennai, jayalalitha, nadasha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil