நாடக காதல்ன்னு அசிங்கப்படுத்தாதீங்க.. நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அந்த காட்சியே ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி உள்ளது.

கோப்ரா படத்துக்கு கிடைத்த அளவுக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்கிற பிரச்சனை ஒருபுறம் சென்று கொண்டிருக்க மற்றொருபுறம் ஏகப்பட்ட அரசியலை இந்த படம் பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நாடகக் காதல், ஆணவக் கொலை என காதலுக்கு பின்னாடி இருக்கும் அரசியலை உரக்கப் பேசியிருக்கிறது இந்த படம்.

ஆக்கிரமித்த கோப்ரா

ஆக்கிரமித்த கோப்ரா

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு விமர்சன ரிதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல கோப்ரா படம் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது ஸ்நீக் பீக்

நட்சத்திரம் நகர்கிறது ஸ்நீக் பீக்

இந்நிலையில், தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் காரசாரமான விவாத காட்சியை ஸ்நீக் பீக்காக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே படத்தின் டிரைலரில் இதில் சில காட்சிகள் இடம்பிடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

நாடக காதல் என்பது வன்மம்

நாடக காதல் என்பது வன்மம்

ஒரு கம்யூனிட்டி மீது தேவையில்லாமல் திணிக்கப்படும் வன்மம் தான் நாடக காதல் என காளிதாஸ் ஜெயராம். டிசர்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு லவ் பண்றது போல சில இளைஞர்கள் பெண்களை ஏமாற்றுகின்ற்னர் என பேசியதும் பொங்கி வெடிக்கும் காட்சி பரபரப்பை கிளப்புகிறது. இயக்குநர் மோகன் ஜி இயக்கிய திரெளபதி படத்தில் நாடக காதல் என்கிற பெயர் இடம்பெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளாரா? பா. ரஞ்சித் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆணவக் கொலை

ஆணவக் கொலை

காதல் அழகானது, காதல் தான் இன பாகுபாடுகளையும் பாலின பாகுபாடுகளையும் களையும் சக்தி கொண்டது என நாடகம் போடுவதற்காக விவாதம் செய்து வரும் போது மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹரிகிருஷ்ணன் காதல் என்றாலே அரசியல். காதலின் பெயரில் ஏகப்பட்ட ஆணவக் கொலைகள் நடக்கின்றன. பெத்து வளர்த்த பெண்களையே கழுத்தை அறுத்து போட்டு விடுகின்றனர் என பேசி அந்த விவாதத்தையே மேலும், ஆழமாக்குகிறார்.

இளவழகன் கொலை

இளவழகன் கொலை

இளவரசன் கொலையை பற்றிய விவாதத்தை இளவழகன் என பெயரை மாற்றிக் கொண்டு பேசியிருக்கிறார் பா. ரஞ்சித். இளவழகன் தற்கொலை செய்து கொண்டார் என காளிதாஸ் ஜெயராம் பேச, அது தற்கொலையே அல்ல கொலை என நாயகி துஷாரா விஜயன் கோபத்தில் கத்தும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளன. ஸ்நீக் பீக்கிலேயே இவ்வளவு விஷயம் இருக்கும் நிலையில், படத்தில் இன்னும் எத்தனை காதல் அரசியல்களை பா. ரஞ்சித் பேசியுள்ளார் என படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X