twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் தேசிய விருது: யார் இந்த பிஜு மேனன்?

    |

    திருவனந்தபுரம்: 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் மலையாள நடிகர் பிஜு மேனன்.

    அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜு மேனனின் மிரட்டலான நடிப்பிற்கு சிறந்த நடிகர் விருதே வழங்கியிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திறமையான கலைஞர்களுக்கு பஞ்சமே இல்லாத மலையாள திரையுலகில், பிஜு மேனன் செய்த மாயங்கள் ஏராளம்.

    ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார் இளையராஜா.. கடவுளின் பேரால் உறுதியிட்டு கூறுகிறேன் என பதவி ஏற்பு! ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார் இளையராஜா.. கடவுளின் பேரால் உறுதியிட்டு கூறுகிறேன் என பதவி ஏற்பு!

    68வது தேசிய விருது

    68வது தேசிய விருது

    கடந்த வாரம் டெல்லியில் 68வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. தமிழில் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகிய படங்கள், மொத்தம் 10 விருதுகளை வென்று அசத்தியது. அதேபோல், மலையாள படங்களும் 8 தேசிய விருதுகளை வென்று மாஸ் காட்டின. இதில், பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம், 4 விருதுகளை வென்றது.

    சிறந்த துணை நடிகர்

    சிறந்த துணை நடிகர்

    68வது தேசிய விருது அறிவிப்பில் சிறந்த நடிகராக சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவும், 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற இந்தி படத்தில் நடித்த அஜய் தேவ்கன்னும் சிறந்த நடிகர் விருதைப் வென்றனர். அதேபோல், சிறந்த துணை நடிகருக்கான விருதை, 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நடித்த பிஜு மேனனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிஜு மேனனுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட மலையாள திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    அமைதியும் ஆக்ரோஷமும்

    அமைதியும் ஆக்ரோஷமும்

    அய்யப்பனும் கோஷியும் படத்தில் அமைதியான முகபாவத்தை வைத்துக் கொண்டு, உடல்மொழியில் ஆக்ரோஷமாக மிரட்டியிருப்பார் பிஜு மேனன். அதுமட்டும் இல்லாமல், பிருத்விராஜ்ஜை விடவும் பிஜு மேனனின் நடிப்பு அனைவராலும் ரொம்பவே பாராட்டப்பட்டது. அய்யப்பனும் கோஷியும் மட்டும் அல்லாமல், அவர் நடித்த மற்றப் படங்களிலும் பிஜு மேனனின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.

    பெரும் கலைஞன்

    பெரும் கலைஞன்

    1991 முதல் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் பிஜு மேனன், தமிழிலும் மஜா, ஜூன் ஆர், தம்பி, அகரம், பழனி உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 5 சுந்தரிகள், அனார்கலி, லக்‌ஷயம், லவகுசா போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிஜு மேனன், ஆர்க்கரியாம் ( Aarkkariyam ) படத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று பிரமாதப்படுத்தியிருப்பார். 'அய்யப்பனும் கோஷியும்' படத்தைத் தொடர்ந்து வெளியான, ஆர்க்கரியாம் படத்தை பிஜு மேனனின் முழுமையான நடிப்புத் திறமைக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மலையாள சினிமாவின் பெரும் கலைஞன் என்றால், அது மிகையாகாது.

    English summary
    National Award for Best Supporting Actor for 'Ayyappanum Koshiyum': Who is this Biju Menon?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X