»   »  ஒரு காஸ்டியூம் டிசைனர் தேசிய விருது பெற்ற கதை… பூர்ணிமா ராமசாமி

ஒரு காஸ்டியூம் டிசைனர் தேசிய விருது பெற்ற கதை… பூர்ணிமா ராமசாமி

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. காஸ்ட்டியூம் டிசைனராக அறிமுகமான படத்திற்கு விருது கிடைத்திருப்பது பூர்ணிமாவிற்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த பூர்ணிமா என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியமான செய்தி அவர் காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மருமகள். அது மட்டுமல்ல பிரபல ஜவுளிக்கடையான நாயுடுஹால் நிறுவனரின் மகள் என்பது கூடுதல் தகவல்.

32 வயதாகும் பூர்ணிமா இல்லத்தரசி மட்டுமல்ல 5 வயது குழந்தையின் தாய். நேற்று வரை யாரென்று தெரியாமல் இருந்த பூர்ணிமாவை பரதேசி படத்திற்கு கிடைத்த தேசிய விருது இந்திய அளவில் அறியவைத்திருக்கிறது. பூர்ணிமாவிற்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது? மேற்கொண்டு படியுங்களேன்.

அழகான நட்பு வட்டம்

அழகான நட்பு வட்டம்

பூர்ணிமாவின் நட்பு வட்டம் மிகப்பெரியது. பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, பிருந்தா ஆகியோர் பூர்ணிமாவின் தோழிகள்.

பாலாவின் மனைவியும் தோழிதான்

பாலாவின் மனைவியும் தோழிதான்

பிருந்தாவின் மூலமாக இயக்குநர் பாலாவின் மனைவி மலரின் அறிமுகம் பிருந்தாவிற்கு கிடைக்கவே நட்பு வட்டம் பெரிதானது. அதுவே பாலாவிடம் சிபாரிசு செய்யும் வரை கொண்டு சென்றுள்ளது.

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி மலர் சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் ஏது என்று நினைத்த பாலா பூர்ணிமாவிடம் பரதேசி படத்தின் கதை பற்றி விவாதம் செய்திருக்கிறார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து பட வாய்ப்பு உறுதியானது

ஒவ்வொரு ஊராக தேடியதன் பலன்

ஒவ்வொரு ஊராக தேடியதன் பலன்

பீரியட் படம் என்பதால் ப்ரீ இண்டிபென்டன்ட் புக்ஸ், சவுத் இண்டியன் ஹிஸ்டாரிக்கல் புக்ஸ்னு தேடி தேடி படித்துள்ளார் பூர்ணிமா. அது 1930-க்கு முந்தைய காலகட்டத்துல வாழ்கிற அனுபவமாவே இருந்ததாம். தவிர பொருட்களைத் தேடி காஞ்சிபுரம், சென்னை என்று அலைந்திருக்கின்றனர். ஸ்வெட்டருக்காக ஊட்டி, நகைக்காக சிவகங்கை என பயணம் செய்தார்களாம்.

15 டிசைன் செய்தோம்...

15 டிசைன் செய்தோம்...

ஒவ்வொரு கேரக்டர்களோட ஆடைக்கும் 10 - 15 வெரைட்டிகளில் டிசைன் செய்து பாலாவிடம் காட்டினால் அதில் இருந்து ஷார்ப்பாக தேர்வு செய்வாரம் பாலா. பித்தளை, வெள்ளி என்று ஏழைகளோட நகைகளை வரலாற்றுப் பக்கங்களில் பார்த்து உருவாக்கியிருக்கின்றனர்.

சணல் கோணி ஆடைகள்

சணல் கோணி ஆடைகள்

படத்தின் ஸ்பெசல் சணல் கோணி ஆடைகள்தான். அது கதை நடக்குற காலத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் பூர்ணிமாவிற்கு விருது கிடைக்கச் செய்திருக்கிறது.

ஐஸ்வர்யா சொன்னதை நம்பலை

ஐஸ்வர்யா சொன்னதை நம்பலை

படம் வெளியான உடன் சில நாட்களில் ஆடை வடிவமைப்புக்கு நேஷனல் அவார்டு கிடைத்திருப்பதாக தோழி ஐஸ்வர்யா தனுஷ் இடம் இருந்து போன் வந்துள்ளது. சிறிது நேரத்தில் படத்தின் ஹீரோயின் வேதிகா வாழ்த்துச் சொன்னாராம். உடனே பாலாவின் மனைவி மலர் இடம் இருந்தும் போன் வரவே இருந்தும் போன் வரவே பாலாவைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறார்.

முதல் படத்திலேயே விருது

முதல் படத்திலேயே விருது

'உனக்கு கிடைக்கும்கிறது நான் எதிர்பார்த்ததுதான்! என்று சொல்லி வாழ்த்தினாராம் பாலா. அறிமுகமான முதல் படத்துலயே தேசிய விருது'னு பாராட்டுகள் தொடர்ந்துட்டு இருக்கு. இதுக்குக் காரணமா இருந்த காஸ்ட்யூம் ஹெட் செல்வம் அண்ணா, வாய்ப்பு கொடுத்த பாலா அண்ணா, என்னோட தோழி மலர் அனைவருக்கும் நன்றி என்று சொல்லி பூரிக்கிறார் பூர்ணிமா.

நாயுடு ஹால் குடும்பத்துப் பெண்

நாயுடு ஹால் குடும்பத்துப் பெண்

பூர்ணிமா 'நாயுடு ஹால்' குடும்பத்துப் பெண். சென்னையில பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு நாயுடு ஹால் கார்மென்ட்ஸ் வேலைகளை அண்ணனோட சேர்ந்து கவனித்து வந்தவருக்கு பரதேசி மூலம் பளிச் வெளிச்சம் கிடைத்துள்ளது.

குடும்பத்தினர் ஆதரவு

குடும்பத்தினர் ஆதரவு

சினிமாவில் வேலை செய்த போது குடும்பத்துக்காக செலவழிக்கும் நேரம் குறைந்து போனது. அப்போது அம்மா, கணவர் திருமகன், ஐந்து வயது குட்டிப் பெண் சமன்னா எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்தனர் என்று மகிழ்கிறார் பூர்ணிமா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Poornima Ramasamy, the costume deisigner of Paradesi is very happy to recieve the national award for her movie debut. This is the first time she is getting a national honour.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more