»   »  ரஜினியை விமர்சித்த டைரக்டரை வெளுத்து வாங்கும் பிரபல நடிகர்!

ரஜினியை விமர்சித்த டைரக்டரை வெளுத்து வாங்கும் பிரபல நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் அரசியல் வேலைகளைத் தொடங்கி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். கட்சிக்கான தொடக்கப் பணிகள் தமிழகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பல பக்கங்களிலும் இருந்து எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரும், பிரபலமான ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

ரஜினி தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகளை நியமித்தல் ஆகிய பணிகளில் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குனர் கரு.பழனியப்பன் ரஜினியை தாக்கி பேசியிருந்தார்.

கரு.பழனியப்பன் பேச்சு

கரு.பழனியப்பன் பேச்சு

பல கேள்விகளை முன் வைத்து கரு.பழனியப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் அவர் நானும் ரஜினியின் ரசிகன் தான் என கூறியிருந்தார். தற்போது இதற்கு ட்விட்டரில் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நட்டி.

நட்ராஜ் பதில்

கரு.பழனியப்பன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் நட்ராஜ். "தன் துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் அரவணைத்தது. அதுவே ஒரு துவக்கம். தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்கங்கள், அனுபவித்த வெற்றிகள் எண்ணிலடங்காதவை. இதை விட எத்தனையோ குழந்தைகளின் படிப்புக்கு உதவியவை. கிடைத்ததை அனைவருடன் பகிர்ந்தது. அது போதும்!"

இவர் ரசிகரா

ஒரு படம்கூட ஓடாத... தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்... யார் என்ன பண்ணனும்னு... இதில் இவன் ரசிகனாமா?... எப்படி தொங்கினாலும் வவ்வாலாக முடியாதுடீ.. வர போக வண்டி குடுத்தாங்கல்ல?

கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு

கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க... எத்தனை பேருக்கு ஃபீஸ் கட்டி இருக்க ... எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு... நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா..? ஏன் ஆகாது... இயற்கை தானே?" என வரிசையாக ட்வீட் போட்டுள்ளார் நட்ராஜ்.

English summary
The initiative of Rajinikanth's political party is taking place throughout Tamil Nadu. There are many criticisms for Rajins's political entry. Rajini's fan cum famous cinematographer Natraj Natty has retaliates criticizers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X