For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாட்டாமை படம் 28 ஆண்டுகள் நிறைவு..சுவாரஸ்யமான தகவல்கள்

  |

  நாட்டாமை படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.

  தமிழ் படங்களில் ஒருவகையான ட்ரெண்டை உருவாக்கிய கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் வந்து சூப்பர் ஹிட் அடித்த படம்.

  பல மீம்ஸுகளுக்கு தீம் கொடுத்த, பல நகைச்சுவை காட்சிகளுக்கு தீனிப்போட்ட படம் நாட்டாமை. அரசியல் நையாண்டிக்கும் இந்த படத்தில் கண்டெண்ட் இருந்தது.

  நாட்டாமை அளவுக்கு சூரியவம்சம் படம் worth- ஆனு கேட்டாங்க!நாட்டாமை அளவுக்கு சூரியவம்சம் படம் worth- ஆனு கேட்டாங்க!

   நிலச்சுவாந்தார்களை ஹீரோக்களாக காட்டிய படம்

  நிலச்சுவாந்தார்களை ஹீரோக்களாக காட்டிய படம்

  தமிழ்நாட்டில் திரைப்படங்கள் ஸ்டுடியோகளில் எடுக்கப்பட்ட வந்த காலத்தில் திரைப்படங்களை கிராமத்தை நோக்கி நகர்த்தியவர் என்று பாரதிராஜாவை சொல்வார்கள். பாரதிராஜாவை பின்பற்றி கிராமத்து கதைகளை நோக்கி நகர்ந்தவர்கள் அவருடைய சிஷ்யர்கள் பலர் உள்ளனர். அதன் பின்னர் தமிழக திரைப்படங்களை பழைய நிலச்சுவாந்தார்களை ஹீரோக்களாக மையப்படுத்தி படம் எடுத்ததில் ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஊருக்குள்ள ஒரு பெரிய மனிதர் இருப்பார்.அவர் மிக நல்லவராக இருப்பார். அவர் குடும்பத்தைச் சுற்றியே இருப்பார்கள். சின்ன கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற கதை அமைப்புகள் கொண்ட படங்கள் ஆரம்ப காலங்களில் வந்தன.

   இரண்டுவேடங்களில் நடித்த நாட்டாமை

  இரண்டுவேடங்களில் நடித்த நாட்டாமை

  இதில் நாட்டாமை மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஆகும். நாட்டாமை படம் வந்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது. 1994 ஆம் ஆண்டு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கேஸ் ரவிக்குமார் சரத்குமார் கூட்டணியில் உருவான படம் நாட்டாமை. இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஒருவர் மூத்த அண்ணன் ஆகவும் சரத்குமார், ராஜு ரவீந்தர் என மூன்று சகோதரர்கள் கொண்ட பெரிய நிலப்பிரபுத்துவ குடும்பம். அப்பா விஜய குமார் நாட்டாமையாக இருந்து பொன்னம்பலம் குடும்பத்தை 18 ஆண்டுகள் ஊரைவிட்டு தள்ளி வைத்துவிடுவார். இதில் அவர் கொல்லப்பட மகன் மூத்த சரத்குமார் நாட்டாமை ஆவார்.

   இளைய சரத்குமாரின் வீரமான வேடம்

  இளைய சரத்குமாரின் வீரமான வேடம்

  அவருக்கு பல வகைகள் உதவுவது அவரது தம்பி சரத்குமார். அண்ணி வேடத்தில் குஷ்பூ நடித்திருப்பார். சரத்குமார் இளைஞராக ஊருக்குள் வலம் வருவார். அவரைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் மிகுந்த மரியாதை உடன் பழகுவார்கள். நாட்டாமையின் தம்பி என்ற பந்தா இல்லாமல் அனைவருக்கும் உதவி புரிபவராக, வீரம் மிகுந்தவராக சரத்குமாரின் கேரக்டர் இருக்கும். இந்த நிலையில் ஊருக்குள் புதிதாக வரும் டீச்சர் சரத்குமார் மேல் ஆசைப்பட்டு அவரிடம் தவறாக நடக்க முயல்வார். அதை சரத்குமார் கண்டித்து விலகுவார். தம்பி சரத்குமாருக்கு மிகப் பெரிய இடத்தில் இருந்து மீனாவை திருமணம் செய்து வைப்பார். அண்ணன் சரத்குமார் வீட்டுக்கு வந்த மருமகள் பணத்திமிருடன் நடப்பதை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார் கேஸ் ரவிக்குமார்.

   பணத்திமிர் மீனா அடங்கும் காட்சி

  பணத்திமிர் மீனா அடங்கும் காட்சி

  ஒரு கட்டத்தில் அண்ணன் சரத்குமார் தண்ணீர் கேட்க கை பக்கத்தில் தானே இருக்கு எடுத்துக்க வேண்டியது தானே என்று தன் பண திமிரை காண்பிப்பார் மீனா. அண்ணன் சரத்குமார் அதை கண்டுக்கொள்ள மாட்டார். அந்த நேரத்தில் மீனாவின் தந்தை சரத்குமார் முன்வந்து கைகட்டி நின்று எங்கள வாழவைத்ததே நீங்க தான் என்று பேசுவார். இதைப் பார்ப்பது பார்த்து விக்கித்துப் போவார் மீனா. அதன் பின்னர் நாட்டாமை சரத்குமாரின் பெருமைகள் தெரிந்து தன்னை மாற்றிக் கொள்வார் மீனா. பெரிய இடத்து வீட்டில் குடும்ப பெண்கள் ஆண்களுக்கு அடங்கி அடிமையாக இருக்க வேண்டும் என்கிற பழமையான கருத்தை ஏதோ பெரிய நாகரீகமான விஷயம் போல் இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

   தவறான தீர்ப்பால் உயிர் துறக்கும் நாட்டாமை

  தவறான தீர்ப்பால் உயிர் துறக்கும் நாட்டாமை

  ஆனாலும் காட்சியின் சுவை படமாக்கப்பட்ட விதம் அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும். இந்த படத்தில் சரத்குமார் தம்பி தவறு செய்தார் என்றவுடன் அவருக்கு பெரிய தண்டனை கொடுப்பார். அதேபோல் இன்னொரு பெரிய மனிதரான பொன்னம்பலத்தின் மகளை தனது 3 வது தம்பி காதலிக்க அதை சேர்த்து வைக்க முயல்வார். இதனால் பகையான பொன்னம்பலம் சரத்குமார் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பார் அவருடைய சதியில் சிக்கிய தம்பி சரத்குமாருக்கு தண்டனை கொடுத்திருப்பார் நாட்டாமை. அதை அறிந்து நாட்டாமை அண்ணன் சரத்குமார் தவறான தீர்ப்பு கொடுத்த நெடுஞ்செழியன் மன்னன் போல் மனம் உடைந்து அங்கேயே இறந்து விடுவார். இந்த படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. படத்தில் நடித்த சரத்குமாருக்கு இப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

   சரத்குமாருக்கு திருப்புமுனை தந்த நாட்டாமை

  சரத்குமாருக்கு திருப்புமுனை தந்த நாட்டாமை

  படத்தை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார் இந்த நேரத்தில் அதிமுகவில் இணைந்தார். அவர் அரசியலுக்கு வருவதற்கு பெரிய ஒரு பாதையை ஏற்படுத்தியதும் இந்த படம் என்று சொல்லலாம். சரத்குமார் புகழேணியின் உச்சத்தில் இருந்த பொழுது வெளிவந்த படம் இது. நாட்டாமை படத்தில் கருத்துக்கள் சில பழைய நிலச்சுவாந்தார்களை ஆதரிக்கும் பிற்போக்குத்தனமாக இருந்தாலும், அந்த படம் எடுக்கப்பட்ட விதம், கதை கரு, காட்சிகள் படமாக்கப்பட்டது, அதன் பாத்திரங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் ஒரு சிறப்பான படம் என்று சொல்லலாம். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி இருப்பார் கேஸ் ரவிக்குமார்.

   பல மீம்ஸுகளுக்கும், காமெடிகாட்சிகளுக்கும் தீனிப்போட்ட படம்

  பல மீம்ஸுகளுக்கும், காமெடிகாட்சிகளுக்கும் தீனிப்போட்ட படம்

  இந்த படத்தில் "நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு" என்ற வசனமும் "தாய் கிழவி" என்று வில்லன் அடிக்கடி தனது தாயாரை சொல்லும் வசனமும், "செல்லாது செல்லாது " என விஜயகுமார் சொல்லும் வசனமும், விஜய்குமார், சரத்குமார் உடல் மொழியும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் மிகப் பிரபலம். அதிலும் கவுண்டமணிக்கு பெண் கிடைக்காமல் இருப்பதும் அவர் எங்கு போய் பெண் தேடினாலும் தந்தை செந்திலால் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் காட்சிகளும் நகைச்சுவையின் உச்சம். மைசன், மைசன் என செந்தில் அழைப்பதும், டேய் தகப்பா என கவுண்டமணி அழைப்பதும் செம ரகளை. கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாடல் மிகப்பிரபலம்.

   மை சன் காமெடி

  மை சன் காமெடி

  இறுதியாக ஒரு பெண்ணை பார்த்து பிடித்து போய் திருமண வரை வந்த பின், மணப்பெண்ணின் தாயார் செந்திலை பார்த்தவுடன் நிலைமை மாறுவதும், சின்ன வயதில் அந்தம்மாவை கைவிட்டு செந்தில் ஓடி வந்ததும், மணமகள் செந்திலின் மகள், கவுண்டமணியின் சகோதரி முறை என்று தெரிந்து கவுண்டமணி துடிப்பார். மை சன் இதுதாண்டா உங்க சித்தி என்று செந்தில் அறிமுகப்படுத்தி வைப்பதும், அப்ப நான் பார்த்த பொண்ணு எனக்கு தங்கச்சியா என்று கவுண்டமணி கொந்தளிப்பதும் மிகப் பெரிய காமெடியாக ரசிக்கப்பட்டது.

  மிக்சர் சாப்பிடுபவர் மீம்ஸுக்கு அடிக்கோடிட்ட காமெடி

  மிக்சர் சாப்பிடுபவர் மீம்ஸுக்கு அடிக்கோடிட்ட காமெடி

  இவ்வளவு பிரச்சனை நடக்குது இங்க ஒருத்தன் உட்கார்ந்து மிச்சர் சாப்பிட்டு இருக்கான் இவன் யாரு என்று கவுண்டமணி கடுப்புடன் கேட்க இவரை தாங்க நான் ஒரு 25 வருஷமா சோறு போட்டு புருசனா வச்சிருக்கேன் என தாயார் சொல்வார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்ட ஒரு காமெடியாகவும் இதில் மிச்சர் சாப்பிடுபவரை வைத்து பல மீம்ஸ்கள் அதன் பின்னர் வெளிவந்தது. நாட்டாமை படம் வெளிவந்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த படம் வெளிவந்த பிறகு இதே பாணியில் பல படங்கள் பிறகு வெளிவந்தன அதில் சில படங்கள் வெற்றி அடைந்தன சில படங்கள் தோல்வி அடைந்தன.

  English summary
  Nattamai Movie was released in 1994. Today marks 28 years since the release of the film. KS Ravikumar, who created a kind of trend in Tamil films, came together with Sarathkumar and scored a super hit. Nattami is a film that has provided the theme for many memes and has been the fodder for many comedy scenes. The film also had content of political satire.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X