»   »  காஜல் அகர்வாலை கரெக்ட் பண்ண பார்த்த அஜீத்தின் ரீல் தம்பி

காஜல் அகர்வாலை கரெக்ட் பண்ண பார்த்த அஜீத்தின் ரீல் தம்பி

Posted By:
Subscribe to Oneindia Tamil
காஜல் அகர்வாலை கரெக்ட் பண்ண பார்த்த நவ்தீப்- வீடியோ

ஹைதராபாத்: தான் நடித்த ஹீரோக்களில் ஒரேயொருவர் மட்டும் தன்னை கரெக்ட் செய்ய முயன்றதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் அவரின் பாலிவுட் கனவு மட்டும் நிறைவேறாமல் உள்ளது.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி, மகேஷ் பாபு, ராம் சரண் தேஜா என்று ஏகப்பட்ட ஹீரோக்களுடன் நடித்துள்ளார் காஜல். ஆனால் தன்னுடன் நடித்த ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக்கானவர் என்று காஜல் தெரிவித்துள்ளார்.

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

மகேஷ் பாபு ரொம்ப அமைதியான ஆள். ஆனால் அவர் ஜோக் சொல்ல ஆரம்பித்தார் என்றால் நாம் வயிறு வலிக்கும் வரை சிருப்போம். அல்லு அர்ஜுன் போன்று யாராலும் ஃபேஷன் டிரெண்டை பின்பற்ற முடியாது என்கிறார் காஜல்.

காஜல்

காஜல்

உங்களுடன் நடித்த ஹீரோக்களில் யாரும் உங்களை கரெக்ட் பண்ண முயற்சி செய்யவில்லையா என்று காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு காஜல், நவ்தீப் மட்டும் இரண்டு முறை முயற்சி செய்தார் என்றார். நவ்தீப் ஏகன் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலை

சேலை

விருது விழாவுக்கு கருப்பு நிற சேலை அணிந்து வந்த காஜல் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். ஏனென்றால் அவர் சொல்லித் தான் அது சேலை என்றே தெரிய வந்தது.

English summary
Actress Kajal Agarwal said in an interview that her co-star Navdeep tried to woo her twice. According to Kajal, Chiranjeevi is the most romantic hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X