உங்க ரொமான்ஸு தாங்க முடியல.. நயன்தாரா கையை எப்படி பிடிச்சிருக்காரு பாருங்க விக்கி.. செம ட்ரோல்!

சென்னை: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து மாட்ரிட் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ்.

Recommended Video

மனைவி Nayanthara-வுடன் வெளிநாடு பறந்த Wikki...எங்கு தெரியுமா? *Kollywood

நடு ரோட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு படு ரொமான்டிக்காக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வழக்கம் போல விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவுடன் ரொமன்ஸ் செய்யும் போட்டோக்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் போட்டு வருவதால் கடுப்பான ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.

ஸ்பெயினில் ஜாலி

ஸ்பெயினில் ஜாலி

ஜவான் படத்தில் ஷாருக்கான், விஜய் எல்லாம் சென்னையில் நடிக்கிறாங்கன்னு வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்க, அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் ஸ்பெயினில் செகண்ட் ஹனிமூனை கணவர் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. தொடையழகு தெரிய எப்போதும் ஷார்ட் டவுசர் அணிந்தபடியே போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நீ என் உலக அழகியே

நீ என் உலக அழகியே

தங்கம், வைரம், தகதகன்னு மின்னுற என தொடர்ந்து தனது மனைவி நயன்தாராவை வர்ணித்து வரும் விக்னேஷ் சிவன் நீ என் உலக அழகியே என சினிமா பாடல் வரிகளையும் கேப்ஷனாக போட்டு தனது சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் இன்ஸ்டாகிராமில் கட்டவிழ்த்து வருகிறார். எதுவுமே ஓவர் டோஸ் ஆனால், ரசிகர்கள் கடுப்பாகத்தானே செய்வார்கள். நயன்தாரா - விக்கியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பலரும் கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கையை விட்ராதீங்க

கையை விட்ராதீங்க

பார்சிலோனாவில் இருந்து வாலன்ஸியாவுக்கு சென்று போட்டோக்களை எடுத்து பதிவிட்ட விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியினர் தற்போது மாட்ரிட் நகரத்துக்கு வந்துள்ளனர். அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு சாய்ந்தபடி ஹீரோ, ஹீரோயின் போல கொடுத்திருக்கும் போஸை பார்த்த நெட்டிசன்கள் கையை விட்ராதீங்க அப்படியே பிடிச்சிக்கோங்க என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

போட்டோகிராபரையும் கூட கூட்டிட்டு போயிடுவீங்களா, இவங்க வேற, ரொமான்ஸ் தாங்கல, போதும் விக்கி முடியல, வாழ்ந்தா இப்படி வாழணும், எப்போ தான் திரும்பி வருவதா ஐடியா, ஏகே 62 வேலையை எப்போ ஆரம்பிப்பீங்க விக்கி, நயன் செம அழகுன்னு ஏகப்பட்ட ட்ரோல்களும், வாழ்த்து கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

நயன்தாரா நடிப்பில்

நயன்தாரா நடிப்பில்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜின் மலையாள படமான கோல்டு, மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள காட்ஃபாதர் படம் மற்றும் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படம் என ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என நடித்துள்ள நயன்தாராவின் படங்கள் வெளியாக உள்ளன. கோலிவுட்டில் கனெக்ட் மற்றும் நயன்தாராவின் 75 படம் என ஏகப்பட்ட படங்கள் அவரது லைன் அப்பில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X