நயன்தாரா என்னம்மா வெட்கப்படுறாங்க பாருங்க.. நெட்பிளிக்ஸில் வெளியான நயன் - விக்கி திருமண டீசர் இதோ!
சென்னை: தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக உள்ள நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திரை பிரபலங்கள் முன்னிலையில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல், ஆவணப் படமாக எடுத்து நெட்பிளிக்ஸிற்கு விற்றுள்ளார் நயன்தாரா.

திருப்பதியில் இல்லை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மகாபாலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் சொகுசு ஹோட்டலில் திருமணத்தை வைத்து விட்டார் நயன்தாரா என தகவல்கள் வெளியானது.

பிரபலங்களுக்காக
ஆனால், நயன்தாரா தரப்பில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களது வசதிக்காக திருப்பதியை தவிர்த்து விட்டு நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை வைத்ததாக கூறினர். தமிழ் சினிமா, மலையாள திரையுலகின் பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் என பலரும் கலந்து கொண்டனர்.

நெட்பிளிக்ஸில் திருமண படம்
பாலிவுட்டில் ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது திருமணத்தை இப்படி ஓடிடி நிறுவனங்களிடம் விற்றதாக கூறப்பட்ட நிலையில், தென்னிந்தியாவில் முதன் முறையாக தனது திருமணத்தை ஆவணப்படமாக எடுத்து நெட்பிளிக்ஸில் வெளியிட காத்திருக்கிறார் நயன்தாரா. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது டீசர் ஒன்றுடன் வெளியாகி இருக்கிறது.

என்ன டைட்டில்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஆவணப்படமாக மாற்றி உள்ள நிலையில், அதற்கு Nayanthara: Beyond the Fairytale என்கிற டைட்டிலை வைத்துள்ளனர். தற்போது நெட்பிளிக்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்களில் அந்த டீசர் வெளியாகி உள்ளது.

வெட்கப்படும் நயன்தாரா
அந்த வீடியோவில் நடிகை நயன்தாரா மணப்பெண் கோலத்தில் வெட்கப்படும் காட்சிகளும், புன்னகைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. நடிப்பது மட்டும் தான் எனக்குத் தெரியும், ஆனால், இத்தனை ரசிகர்கள் என் மீது காட்டும் அளவுக் கடந்த அன்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று பேசியுள்ளார். விக்னேஷ் சிவனும் தனது தங்கம் குறித்து கொஞ்சலாக பேசியுள்ள டீசர் தற்போது டிரெண்டாகி வருகிறது.

எப்போ ரிலீஸ்
ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று டீசர் வெளியாகி உள்ள நிலையில், செப்டம்பர் 9ம் தேதி நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் ஆவணப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் என்று மட்டுமே இந்த டீசரில் நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











