ஒட்டிய கன்னம் புஸ்ஸென்று இருக்கே.. கல்யாணமான 6 நாளில் இப்படி ஒரு மாற்றமா? நயனை ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை : புதுமண தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தற்போது சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவுல்லாவுக்கு சென்றுள்ளனர்.
இணையத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணமான ஆறே நாளில், நயன்தாரா இப்படி மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம்
காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். 20 புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத காலை 10.25 மணிக்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலியை கட்டினார். தாலிகட்டும் புகைப்படத்தை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

200 பேருக்கு அழைப்பு
திருமணத்திற்கு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் 30 பேர் மட்டுமே திரைப்பிரபலங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், விஜய், விஜய்சேதுபதி, அஜித்தின் மனைவி என ஏராளமான நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

மும்பைக்குழு
திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருந்தனர். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரம் செய்த காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்திருந்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்
திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு இருவரும் ஜோடியாக சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் கேரளா சென்றுள்ளனர். கொச்சிவிமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து விமான நிலைய ஊழியர்கள் அவர்களை வரவேற்றனர்.

திருவுல்லா கோவிலில்
இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் தங்கள் சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவுல்லாவுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் சார்பாக மரியாதையையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வந்த நயன்-விக்கி தம்பதியினருடன் இணைந்து ரசிகர்கள் போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

போகாத கோவில் இல்லை
இந்த போட்டோக்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன. கேரள மாநிலத்தில் பழமைவாய்ந்த கோவிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவர்கள் காதலித்து வந்த போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோயில் வழிபாடு செல்பவர்கள் என்பதும், இவர்கள் தென் இந்தியா வட இந்தியாவில் போகாத கோவில்கள் இல்லை.
Recommended Video

ஆறே நாளில் இப்படி மாறிவிட்டாரே
திருமணமான பிறகு நயன்தாராவின் கன்னம் ஒட்டிப் போயில்லாமல் சற்று புஸ்ஸென்று இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணமான ஆறே நாளில் நயன் இப்படி மாத்திட்டீங்களே என இயக்குநர் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











