»   »  தலைவி டூ தோழர்... நயனின் வியக்க வைக்கும் வளர்ச்சி இது!

தலைவி டூ தோழர்... நயனின் வியக்க வைக்கும் வளர்ச்சி இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கௌரி முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை நயனின் சினிமா பயணம்..வீடியோ

நயன் சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அசைக்க முடியாத லேடி சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். நயன் சகாப்தம் முடிந்து விட்டது என்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஃபீனிக்ஸ் பறவையாய் இன்னொரு ஹிட் கொடுத்து திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

அறம் படத்தில் நயன்தாராவின் பெயர் மதிவதனி. உண்மையில் இந்த பெயரை வைப்பதற்கு சம்மதிக்க அவருக்கு உணர்வு இருந்திருக்க வேண்டும். நிச்சயம் மதவதனி யாரென்று தெரியாமல் இருந்திருக்காது.

Nayanthara career: An ultimate growth in 14 years

இன்று தென் இந்திய சினிமாவின் முடிசூடா ராணியாக வலம் வரும் நயன்தாரா சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. 2003 ல் மலையாளத்தில் வெளியான மனசின்னக்கரே என்ற படம் தான் நயனின் அறிமுக படம். ஜெயராம், ஷீலா, நயன் தாரா நடிப்பில் அந்த படம் 25.12.2003 அன்று வெளியானது. செம ஹிட் படம் அது.

இந்த படத்தில் நயன் நடித்ததே ஆச்சர்யமான விஷயம். படத்தில் ஷீலாவுக்குதான் முக்கிய கதாபாத்திரம். எனவே நயனுடைய கதாபாத்திரமான கௌரி கேரக்டருக்கு பொருத்தமான பெண் கிடைக்காததால் கௌரி கேரக்டருக்கு காஸ்டிங் பண்ணாமலேயே ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார் அந்த பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு. கேரளாவின் முன்னணி வார இதழில் நயன்தாரா இடம்பெற்ற ஜுவல்லரி விளம்பரம் வந்திருந்தது. அதைப் பார்த்து விட்டுத்தான் நயனை செலக்ட் பண்ணி வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள்.

அந்தப் படம் வெளியாகி ஒரே ஆண்டில் சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியானார்.

அன்று நயனே எதிர்பார்த்திருக்க மாட்டார் இவ்வளவு பெரிய நடிகை ஆவோம் என்று!

English summary
Nayanthara, the lady superstar of Tamil Cinema has completed 14 years of her acting career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X