»   »  பாலகிருஷ்ணா ஜோடி... நயன்தாரா கேட்ட நாலு கோடி!

பாலகிருஷ்ணா ஜோடி... நயன்தாரா கேட்ட நாலு கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூன்றாவது முறையாக சீனியர் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் 102வது படம். கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

மறுக்காமல்...

மறுக்காமல்...

ஏற்கெனவே சிம்ஹா, ஸ்ரீராமராஜ்யம் படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டவர்தான் நயன்தாரா. ஆனால் இந்த முறை நடிக்க வருவாரோ என்ற தயக்கத்துடன் அணுகினார்களாம். ஆனால் மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம் நயன்தாரா.

4 கோடி

4 கோடி

ஆனால் அடுத்து அவர் போட்டதுதான் குண்டு. இந்த முறை ரூ 4 கோடி கொடுத்தால்தான் நடிப்பேன் எனக் கூறியிருக்கிறார். தயாரிப்பாளரும் மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம்.

தமிழிலும்...

தமிழிலும்...

மாயாவுக்குப் பிறகு தனக்கான பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டு வந்தார் நயன்தாரா. ஆனால் டோராவின் தோல்வி அவரை மீண்டும் கமர்ஷியல் ஹீரோ படங்களை ஒப்புக் கொள்ள வைத்துள்ளது. தமிழிலும் முன்னணி நாயகர்களுடன் இனி நடிக்கப் போகிறாராம்.

கல்யாண்

கல்யாண்

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க நயன்தாரா ரூ 4 கோடி கேட்டதை தயாரிப்பாளர் சி கல்யாணே செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Nayanthara has demanded Rs 4 cr for acting with Balakrishna in a Telugu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil