சமந்தாவை அழகாய் காட்டியுள்ள விக்னேஷ் சிவன்.. நயன்தாரா ஏன் டல் அடிக்கிறாரு.. டிரெண்டாகும்

சென்னை: சமந்தாவின் பிறந்தநாளுக்கு சரியான பரிசாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி உள்ளது.

கண்மணி கங்குலியாக நடித்துள்ள நயன்தாராவை விட கதீஜாவாக நடித்துள்ள சமந்தாவை தான் விக்னேஷ் சிவன் அழகாக காட்டியுள்ளார் என்கிற குற்றச்சாட்டை நயன் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும், நேற்று வரை நயன்தாரா ஹாஷ்டேக் டிரெண்ட் ஆன நிலையில், படம் வெளியான பிறகு #Khatija ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கலக்கும் கதீஜா

கலக்கும் கதீஜா

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் கலக்கலாக உள்ளதாகவும், அவரது நடிப்புத் தான் சீட்டில் ரசிகர்களை கட்டிப்போட வைத்தது என சமந்தா ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விமர்சனத்தையும் முன் வைத்து வருகின்றனர்.

சமந்தாவோட மாஸ்

தியேட்டரில் விஜய்சேதுபதி, நயன்தாரா டைட்டில் கார்டு போடும் போது எழுந்த சத்தத்தை விட சமந்தாவின் பெயர் கடைசியாக போடும் போது எழுந்த சத்தம் தான் அதிகம் என வீடியோவுடன் போட்டு சமந்தாவின் மாஸை பாருங்க என கதீஜா ஆர்மியினர் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சமந்தா என்ட்ரி

சமந்தா என்ட்ரி

டைட்டான கிளிட்டர் உடையை அணிந்து கொண்டு பாரில் செம ஹாட்டாக சமந்தா கொடுக்கும் மாஸ் என்ட்ரியே போதும் என அவரது ரசிகர்கள் படத்தின் வீடியோ க்ளிப்பையும் ஷேர் செய்து சமந்தாவின் அழகையும் நடிப்பையும் வர்ணித்து வருகின்றனர்.

சமந்தா தான் அழகு

சமந்தா தான் அழகு

கதீஜாவா? கண்மணியா? என்கிற கேள்விக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டரிலேயே கதீஜா தான் என கத்தி வருகின்றனர். மேலும், விக்னேஷ் சிவன் சமந்தாவை தான் இந்த படத்தில் அழகாக காட்டியுள்ளார் என்றும் சமந்தாவின் கதாபாத்திரத்தை அந்த அளவுக்கு மனுஷன் செதுக்கி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

நயன்தாரா ரசிகர்கள் அப்செட்

நயன்தாரா ரசிகர்கள் அப்செட்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவை டம்மி ஆக்கி விட்டார் விக்னேஷ் சிவன் என நயன்தாரா ரசிகர்கள் எல்லாம் அப்செட் ஆகி உள்ளனர். சமந்தாவுக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை நயனுக்கு கொடுக்கவில்லை என்றும், நானும் ரவுடி தான் படத்தில் நயன் எப்படி இருந்தார் என்றும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

Recommended Video

#KRK Kaathuvaakula Rendu Kaadhal Public Opinion | Filmibeat Tamil
விட்டுக் கொடுத்த நயன்தாரா

விட்டுக் கொடுத்த நயன்தாரா

சமந்தா இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததும், அவருக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் எனக் கூறியதே நயன்தாரா தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் நயன்தாரா தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். மேலும், சேலையில், அவ்வளவு அழகாக காட்சிக்கு காட்சி கண்களுக்கு விருந்து வைக்கிறார் நயன்தாரா என்றும் ரசிகர்கள் தங்கள் தலைவியை விட்டுக் கொடுக்காமல் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X